Categories: சினிமா

கோலாகலமாக நடைபெற்ற DON பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி பேச்சுலர் பார்ட்டி..! கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன்..!

வெளியிட்டது

இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் சிபி சக்ரவர்த்தி. இவர் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து டான் படத்தினை இயக்கி இருந்தார். இப்படத்தில் இவருடன் பிரியங்கா மோகன் , சூரி மற்றும் ஏஸ்ஜெ சூர்யா ஆகியோர் நடித்து இருந்தனர். இப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பினை பெற்று இருந்தது. இப்படம் நூறு கோடி வரை வசூலித்து சாதனை படைத்து இருந்தது.

கோலாகலமாக நடைபெற்ற DON பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி பேச்சுலர் பார்ட்டி..! கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன்..! 1

முதல்படமே நூறு கோடி வசூலை கடந்ததால் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி தனக்கென தனி இடத்தை சினிமாவில் பிடித்து உள்ளார். தற்போது இவர் தனக்கான அடுத்தப்படத்திற்காக கதையை எழுதி வருகிறார். இவர் மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல் வெளிவந்து கொண்டு இருக்கும் நிலையில், தற்போது இயக்குனர் சிபிக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

தனது திருமணத்தை முன்னிட்டு இயக்குனர் சிபி நண்பர்களுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்து உள்ளார். இந்த பார்ட்டியில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டுள்ளார். மேலும் அவருடன் டான் படத்தில் நடித்த சிவாங்கி கலந்துகொண்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

வெளியிட்டது

புதிய செய்திகள்