இரட்டை இலக்கு வளர்ச்சி தேவை: நிரஞ்சன்

இரட்டை இலக்க உள்நாட்டு உற்பத்தி திறனை எட்டினால் மட்டுமே நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியுமென அசோசெம் நிறுவனத்தின் தலைவர் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

இரட்டை இலக்கு வளர்ச்சி தேவை: நிரஞ்சன் 1
நிரஞ்சன்

வேலையின்மை, வங்கி சாரா நிதி நிறுவங்களின் உள்ள குளறுபடிகள், கிராமப்புற மக்களிடம் குறைந்த நுகர்வு தன்மை போன்ற காரணங்களால் இந்தியாவின் பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கின்றன.

விளம்பரம்

2019-20ஆம் நிதி ஆண்டில் 12 சதவிகித வளர்ச்சியை பெற வேண்டிய இந்தியா 4.5 சதவிகிதமாக இருக்கிறது. ஏற்கனவே ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்து விட்டனர்.

இது போன்ற பல சிக்கல்கள் இருக்கும் போது, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கான வரியை குறைத்து அறிவித்தார். ஆனால் அந்த நட்டத்தை மீட்பதற்கான மாற்று திட்டத்தை அறிவிக்கவில்லை. இதனை சுட்டி காட்டி பேசிய சர்வதேச நாணய நிதியத்தின் மூத்த பொருளாதார ஆலோசகர் கீதா கோபிநாத், நிதி துறையில் உள்ள சிக்கல் என விமர்ச்சித்திருந்தார்.

விளம்பரம்

இந்நிலையில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பான அசோசெம் அமைப்பின் தலைவர் நிரஞ்சன், பணப்புழக்கம் மற்றும் தேவை குறைந்து வருகிறது. ஆதலால், நுகர்வை உயர்த்த வழிவகை செய்யப்பட வேண்டும். இது தவிர ஜிஎஸ்டி விகிதத்தினையும், தனி நபர் வருமான வரி மற்றும் மேம்பட்ட கடன் ஓட்டம் உள்ளிட்டவற்றை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அசோசெம் கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடையவை  வெங்காயம் இறக்குமதி: உள்நாட்டு பொருளாதாரத்தை பாதிக்கும்!

மேலும், இந்திய பொருளாதாரம் இருக்கும் நிலையில், இரண்டு இலக்க வளர்ச்சி காண வேண்டும். அதிலும் நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் கண்டுள்ள வளர்ச்சியை ஈடுகட்ட 12 சதவிகிதமாக வளர்ச்சி காண வேண்டும் என்றும் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment