Categories: சமூகம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை பரவலாக மழை!!

வெளியிட்டது
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை பரவலாக மழை!! 1

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்க கடலில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு சில இடங்களில் லேசான மழையும், ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.

அதன் படி சென்னை, திருவள்ளூர், தஞ்சை, திருச்சி, கடலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்ய தொடங்கியது.சென்னையில் கோயம்பேடு, வடபழனி, கத்திபாரா, விமான நிலையம், அனகாபுத்தூர், பல்லாவரம், ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்