
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக மழை பெய்து வருகிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையில் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து கொண்டிருக்கிறது.
இதனால் அணையின் நீர் அளவு தொடர்ந்து 33 வது நாளாக 120 அடியாக நீடித்து வருகிறது.இதனால் காவிரி டெல்டா பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விளம்பரம்
இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,900 கன அடியாக உள்ளது. அணையில் தற்போது 93.47 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது. மேலும் அணையில் இருந்து வினாடிக்கு 4,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
விளம்பரம்