நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் கல்லூரி படத்தின் மூலம் சினிமாவுக்குள் நாயகியாக அறிமுகம் ஆகியவர் நடிகை தமன்னா. முன்னதாக கேடி படத்தில் வில்லியாக நடித்து தனது நடிப்பால் மிரட்டி இருப்பார். முதல் படமே வில்லி என ஆரம்பித்து அடுத்தப்படத்தில் சாந்தமான கதாநாயகியாக நடித்து தமன்னா பட்டையை கிளப்பி உள்ளார். இந்த படத்திற்கு பிறகு தனது கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தார் தமன்னா.

நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..! 1

விளம்பரம்

தமிழில் கிடைத்த வெற்றி தமன்னாவை தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாவுக்கு அழைத்து சென்றது. பாலிவுட்டில் கதாநாயகியாக தொடர்ந்து நடித்து அசத்தி வருகிறார். ஜெயிலர் படத்தில் காவலா பாடலுக்கு இவர் போட்ட குத்தாட்டம், ஊ சொல்றியா பாடலுக்கு ஆடிய சமந்தாவையே மறக்க வைத்து இருந்தது. இப்படி பிசியாக சினிமாவை வலம் வரும் தமன்னா, ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார்.

நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..! 3

விளம்பரம்

தற்போது அமலாக்கத்துறை நடிகை தமன்னாவிடம் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. FAIRPLAY செயலியில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பியதற்காக, அந்த செயலியின்,விளம்பர தூதரான நடிகை தமன்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

விளம்பரம்

Leave a Comment