சீரியல் முடியப் போகிறதா.? பிரியா வெளியேறுகிறாரா.? ஸ்வாதி போட்ட பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஈரமான ரோஜாவே’ தொடரின் பாகம் 2 விரைவில் முடிவடைய போகிறது என்கிற செய்தி இணையத்தில் தீயாக பரவி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் இந்த நாடகத்தில் நடித்து வரும் நடிகை சுவாதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்தது தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு என்று மக்கள் மத்தியில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சன் டிவி மற்றும் ஜீ தமிழ் என பல தொலைக்காட்சிகள் சீரியல்களை ஒளிபரப்பி வரும் போதிலும் விஜய் டிவி இன்றளவும் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறது. அந்த வகையில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’.

சீரியல் முடியப் போகிறதா.? பிரியா வெளியேறுகிறாரா.? ஸ்வாதி போட்ட பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள் 1

இந்த சீரியலில் அண்ணன் தம்பிகளாக பார்த்திபன், ஜீவா கதாபாத்திரத்தில் சித்தார்த்தும், திரவியமும் நடித்து வருகின்றனர். அதேபோல பிரியா கதாபாத்திரத்தில் சுவாதியும், காவியா கதாபாத்திரத்தில் கேப்ரியல்லாவும் நடித்து வருகின்றனர். இந்த கதையில் யாருக்கும் தங்களது காதலர்களோடு திருமணம் நடைபெறவில்லை் அண்ணனுக்கு நிச்சயித்த பெண்ணை தம்பியும், தம்பி காதலித்த பெண்ணே அண்ணனும் திருமணம் செய்து கொள்கின்றனர்.

அதேபோல கடைசி தம்பியாக இருக்கும் அர்ஜுன் காதலித்து வரும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாமல் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். தற்போது கதைப்படி அர்ஜுனனின் மனைவியாக இருக்கும் ஐஸ்வர்யா கர்ப்பமாக இருக்கிறார். ஆனால் அந்த கர்ப்பத்திற்கு வேறு ஒருவருடன் ஏற்பட்ட பழக்கம் தான் காரணம் என்பதை பிரியா தற்போது நிரூபிக்கிறார். இதனால் கதையில் அடுத்தடுத்த பல திருப்பங்கள் நடைபெற்று வருகிறது.


இத்தனை நாட்களாக சண்டை போட்டு வந்த ஜீவா – பிரியா கதாபாத்திரம் இணைந்து விட்டது. அதேபோல பார்த்தி காவியாவும் இணைந்து விட்டனர். அர்ஜுனுக்கும் அவரது மனைவி தவறானவர் என்று தெரிந்து விட்டதால் அவரும் தனது மனைவி விவாகரத்து செய்துவிட்டு பிரியா – காவியாவின் தங்கையான சக்தியை திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதனால் கதைக்களம் பெரிய அளவில் சுவாரஸ்யம் இல்லாமல் நகர இருப்பதால் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பிரியாவாக நடித்து வரும் நடிகை சுவாதியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “சில விஷயங்கள் முடிவுக்கு வருகிறதா?” என்று சோகத்துடன் இருக்கும் புகைப்படத்துடன் பதிவிட்டு கேள்வி எழுப்பி இருந்தார். அவர் சீரியல்தான் முடிவுக்கு வருவதை சொல்கிறாரா? அல்லது அவர் சீரியலில் இருந்து விலகப் போகிறாரா? என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்