தனிக்குடித்தனம் செல்வது பற்றி ஜீவா சொன்ன வார்த்தை.! அதிரடி முடிவை எடுத்த ப்ரியா.! ப்ரோமோ உள்ளே.!

வெளியிட்டது

ஈரமான ரோஜாவே தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஜீவாவிடம் பிரியா நீ இப்போது என்னுடன் தனிக் குடித்தனம் வரவில்லை என்றால் நான் தனியாக ஒரு வீட்டை பார்த்து போய்க் கொண்டே இருப்பேன் என்று அதிரடியாக கூறுகிறார் இதனால் ஜீவா என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். ஈரமான ரோஜாவே தொடரில் அடுத்தடுத்து விறுவிறுப்பான கட்டங்கள் நடந்து கொண்டு வருகிறது. தனது தங்கை காவியா காதலித்த நபரை தான் திருமணம் செய்து இருப்பதை நினைத்து பிரியா நாளுக்கு நாள் அவமானத்தில் உணர்கிறார். மேலும் தம்பியை காதலித்து விட்டு அண்ணனை திருமணம் செய்து கொண்ட காவியா சந்தோஷமாக வாழ தொடங்கி இருக்கிறார். இதெல்லாம் பிரியாவிற்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் தனது கணவரும் அவருடைய முன்னாள் காதலியும் ஒரே வீட்டில் வசிப்பது பிரியாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ப்ரோமோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தனிக்குடித்தனம் செல்வது பற்றி ஜீவா சொன்ன வார்த்தை.! அதிரடி முடிவை எடுத்த ப்ரியா.! ப்ரோமோ உள்ளே.! 1
இதனால் தனது கணவர் ஜீவாவை அழைத்துக் கொண்டு பிரியா தனிக்குடித்தனம் செல்வதற்காக திட்டமிடுகிறார். மேலும் இந்த குடும்பத்தை அழிக்க நினைக்கும் ஜீவாவின் அத்தை தேவியின் பேச்சை கேட்டுக்கொண்டு அவர் சற்று மனம் மாறுகிறார். தொடர்ந்து ஜீவா, காவியா, ஜீவாவின் பெற்றோர்கள் என அனைவரிடமும் சென்று தான் தனிக்குடித்தனம் செல்ல இருக்கும் விஷயத்தை பிரியா கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர்கள் யாருமே பிரியாவின் இந்த யோசனைக்கு உடன்படவில்லை. காதலித்த இரண்டு பேரும் ஒரே வீட்டில் இருப்பது தனக்கு ஏற்புடையதாக தெரியவில்லை என்று சொல்லி பிரியா தனிக்குடித்தனம் செல்லும் முடிவில் உறுதியாக இருக்கிறார். பிரியாவின் இந்த முடிவை சற்றும் எதிர்பார்க்காத குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர். இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் தனிக்குடித்தனம் செல்ல பிரியா ஜீவாவை அழைக்கிறார்.


ஆனால் ஜீவா பிரியாவின் இந்த முடிவிற்கு உடன்பட மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது பிரியா நீங்கள் தனி குடித்தனம் வரவில்லை என்றால் நான் தனியாக ஒரு வீட்டை பார்த்துக் கொண்டு போய்க் கொண்டே இருப்பேன், அந்த முடிவில் நான் இ
உறுதியாக இருக்கிறேன் என்று ஜீவாவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறார். அப்போது அங்கு வரும் தேவி நீ உன் முடிவில் உறுதியாக இருக்கிறாய், இப்படியே இரு என்று சொல்லி பிரியாவை மேலும் தூண்டி விடுகிறார். எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்கிறார் தேவி. அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்