விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே தொடரில் தற்போது நீயா நானா கோபிநாத் சிறப்பு விருந்தினராக என்ட்ரி கொடுத்திருக்கிறார். ஈரமான ரோஜாவே தொடரின் முதல் பாகம் கொடுத்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஜீவா – பிரியா, பார்த்தி – காவியா என்ற இரண்டு ஜோடிகள் இருக்கின்றனர். இந்த இரண்டு ஜோடிகளும் தங்களுக்குள் இருக்கும் மனக்கசப்புகளை மறந்து ஒன்றாக இணைவார்களா? என்பது தான் நாடகத்தின் விறுவிறுப்புக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் ஜீவா பிரியாவிடம் நம் ஹோமிற்கு மிகப்பெரிய விஐபி வருகிறார் என்று கூறிக் கொண்டிருக்கிறார். அப்போது காரில் கோபிநாத் வந்து இறங்குகிறார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து ஜீவாவும் பிரியாவும் வரவேற்கின்றனர். சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் பேசும் கோபிநாத், ஒரு கூட்டு குடும்பம் சிதைவதறதுக்கு மருமகள் தான் காரணம் என்று நாம் முடிவிற்கு வந்துவிட முடியாது.

தனி குடுத்தனத்தில் இருக்கும் சுதந்திரத்தையும், முடிவெடிக்கும் அதிகாரத்தையும் எதிர்பார்க்கும் பெண்ணுக்கு கூட்டு குடும்பத்தை கொடுத்தால்? அவரின் கணவன்மார்கள் அதை செய்து கொடுத்திருந்தால் அவர்கள் ஏன் தனியாக போக வேண்டும் என்று நினைக்கிறார்கள் என பேசுகிறார். இதைக் கேட்ட ஜீவா தலைகுனிந்து நிற்கிறார். பிரியா ஜீவாவை முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video.!
YouTube Video Embed Code Credits: Vijay Television