Categories: சினிமா

நடிகர் அசோக் செல்வனின் எமக்கு தொழில் ரொமேன்ஸ் படத்தின் SNEAK PEEK வெளியாகியது..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அசோக் செல்வன். பில்லா 2 படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆகி இருந்தார். பின்னர் சூது கவ்வும் படத்தில் கூட்டத்தில் ஒருவனாக நடித்து அசத்தியிருந்தார் அசோக் செல்வன். சினிமாவில் கதாநாயகனாக போராடிய இவருக்கு, தெகிடி படம் அந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து இருந்தது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற பாடல் அனைவரையும் கவர்ந்து இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் அசோக் செல்வனின் எமக்கு தொழில் ரொமேன்ஸ் படத்தின் SNEAK PEEK வெளியாகியது..! 1

இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நாயகனாக நடித்தாலும் இவருக்கான வரவேற்பு சினிமாவில் கிடைக்கவில்லை. தொடர்ந்து போராடிய இவருக்கு ஓ மை கடவுளே படம் அமைந்தது. இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த போர் தொழில் படம் மாபெரும் வெற்றியை பெற்றது. தற்போது நல்ல கதைகளை கேட்டு நடித்து வருகிறார்.

இவர் தான் காதலித்து வந்த நடிகை கீர்த்தி பாண்டியனை அண்மையில் திருமணம் செய்துகொண்டு உள்ளார். தற்போது இவர் எமக்கு தொழில் ரோமென்ஸ் படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தின் சில நிமிட காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed Video Credits : MOVIE BUFF TAMIL

வெளியிட்டது

புதிய செய்திகள்