இப்படிதான் செத்து போகணும்னு ஆசைபட்டாரு! அது மாதிரியே நடந்துடுச்சு..பிரதாப் போத்தன் இறப்பு பற்றி பேசிய கனிகா

இயக்குனரும் நடிகருமான திரு பிரதாப் போத்தன் அவர்கள் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 69. அவர் காலமான செய்தி ஒட்டுமொத்த திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிராதப் போத்தன் நடிகை ராதிகாவின் முன்னாள் கணவர் ஆவார். இவருக்கும் ராதிகாவிற்கும் 1985 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அடுத்த ஆண்டே ராதிகாவை விட்டு பிரிந்தார். பின்னர் 1990 ஆம் ஆண்டு அமலா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பிரதாப் போத்தன் அமலா தம்பதியருக்கு கேயா என்ற மகளும் உள்ளனர். பின்னர் தனது இரண்டாவது மனைவியை விட்டுப் பிரிந்தும் சென்னையில் கீழ்பாக்கத்தில் ஒரு அப்பார்ட்மெண்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் பிரதாப் போத்தன் தனது வீட்டிற்குள் இன்று காலை இறந்து கிடந்துள்ளார். வீடியோ கீழே உள்ளது.

இப்படிதான் செத்து போகணும்னு ஆசைபட்டாரு! அது மாதிரியே நடந்துடுச்சு..பிரதாப் போத்தன் இறப்பு பற்றி பேசிய கனிகா 1

விளம்பரம்

அவரது இறப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மாரடைப்பால் இறந்திருக்க கூடும் என்று பல செய்திகள் தெரிவிக்கின்றன. 1952 ஆம் ஆண்டு கேரளாவில் திருவனந்தபுரத்தில் பிறந்தவர் பிரதாப் போத்தன். அவர்கள் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் 1978 ஆம் ஆண்டு ஆரவம் என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தமிழில் அழியாத கோலங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி உட்பட நூறு படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். பின்னர் மைடியர் மார்த்தாண்டம், மீண்டும் ஒரு காதல் கதை, ஜீவா, வெற்றி விழா, மகுடம், லக்கி மேன், சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட பல படங்களையும் இயக்கி இருக்கிறார்.

தொடர்புடையவை  கராத்தே செய்கிறேன் என்று தலையில் தீப்பிடித்த மன்சூர்..சக்கு சக்கு பத்திக்கிச்சு என்று கலாய்த்து விட்ட ப்ளூ சட்டை

இப்படிதான் செத்து போகணும்னு ஆசைபட்டாரு! அது மாதிரியே நடந்துடுச்சு..பிரதாப் போத்தன் இறப்பு பற்றி பேசிய கனிகா 3

விளம்பரம்

படிக்காதவன் படத்தில் தனுஷிற்கு அப்பாவாகவும், விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்திலும், மலையாளத்தில் சமீபத்தில் வெளியான சிபிஐ 5 படத்திலும் பிரதாப் போத்தன் நடித்திருந்தார். அவர் மறைவிற்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடிகை கன்னிகா அவர் குறித்து ஒரு செய்தியை பகிர்ந்து உள்ளார். அவர் பேசும் பொழுது தானும் பிரதாப் போத்தனும் நல்ல நண்பர்கள், அவருடன் இணைந்து இரண்டு மூன்று படங்களில் மலையாளத்தில் நடித்திருந்ததாகவும் கூறினார். மேலும் அவர் தன்னிடம் தூக்கத்திலேயே என்னுடைய உயிர் போய்விட வேண்டும் என்று பலமுறை கூறி இருந்ததாகவும், தற்போது அவர் முகத்தை பார்க்கும் பொழுது அந்த முகத்தில் சந்தோஷம் இருப்பதால் அவர் ஆசைப்பட்ட படியே அவர் தூக்கத்தில் இறந்து போனதாகவும் கூறினார். அவரின் பேட்டியை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Thanthi Tv

விளம்பரம்

Leave a Comment