“ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு…கண்ணீர் விட்டு அழுத பவி டீச்சர்”!!

இன்று நடிகர் பார்த்திபனின் “இரவின் நிழல்” படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பார்த்திபன், ரோபோ ஷங்கர், வரலக்ஷ்மி சரத்குமார், பிரிக்கடா என பலர் நடித்துள்ளனர். “non-linear single shot” படமாக வெளியாகியுள்ள இந்த படம் விமர்சனரீதியாகவும் விமர்சகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. பார்த்திபனின் திரைக்கதை இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ளது.

"ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு...கண்ணீர் விட்டு அழுத பவி டீச்சர்"!! 1

விளம்பரம்

இந்த படத்தை நடிகர் பார்த்திபனும், நடிகை பிரிக்கடாவும் திரையரங்கில் சென்று ரசிகர்களை பார்த்து அவர்களின் வரவேற்பை நேரில் பார்த்து ரசித்துள்ளனர். இந்த படத்தில் நாயகியாக நடித்து திரையில் அறிமுகமாகியுள்ளார் பிரிக்கடா. யூடியூப் வெப்சீரிஸ் “ஆஹா கல்யாணத்தில்” நடித்து ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இவர், இப்பொது திரைத்துறையில் அறிமுகமாகியுளளார்.

"ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு...கண்ணீர் விட்டு அழுத பவி டீச்சர்"!! 3

விளம்பரம்

குறும்படங்கள், மாடலிங் என பிரபலமாக இருந்த இவரை கண்டெடுத்து பார்த்திபன் திரைத்துறையில் நாயகியாக அறிமுகப்படுத்தியுள்ளார். இதற்கு முன் இவர் நடிகர் விஷாலின் “அயோக்கியா” மற்றும் விஜயின் “மாஸ்டர்”  படத்தில் சிறிய பாத்திரங்களில் ஏற்கனவே நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று இந்த படத்தின் காட்சியை பார்த்த இவர், ரசிகர்கள் தனக்கு கொடுத்த வரவேற்பை கண்டு வியந்து பேட்டிகொடுக்கும் முன்பே எமோஷனாலாகி கொஞ்சம் அழுதே விட்டார். அருகில் இருந்த பார்த்திபன் அவரை தேற்ற முற்பட்டாலும் கொஞ்சம் அழுத்தவுள்ளார் பிரிக்கடா.

தொடர்புடையவை  கமலை இவளோ ஜாலியா பாத்ததே இல்லை..சூப்பர் சிங்கரில் குழந்தைகளுடன் விளையாடிய கமல்

"ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு...கண்ணீர் விட்டு அழுத பவி டீச்சர்"!! 5

விளம்பரம்

பின்னர் பேசிய பிரிக்கடா, “நான் எனக்கு இவளோ வரவேற்பு மக்கள் கொடுப்பாங்கனு எதிர்பார்கல, கொஞ்சம் எமோஷனலா இருக்கு, எல்லாருக்கும் ரொம்ப தேங்க்ஸ், முக்கியமா நான் பார்த்திபனுக்கு ரொம்பவே நன்றி கடன் பட்டுளேன்” என கூறி விடைபெற்றுள்ளார். அந்த விடியோவை நீங்களும் காண…

விளம்பரம்

Video Courtesy – ThiCinemas

விளம்பரம்

Leave a Comment