காதலியுடன் செம்ம ரொமான்ஸ் செய்யும் எரும சா ணி விஜய்.! Pre Wedding Photoshoot நடத்திய விஜய்.!

வெளியிட்டது

எரும சாணி என்கிற youtube சேனலை நடத்தி வரும் விஜய்க்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும், தனது காதலியை அவர் கரம்பிடிக்க இருப்பதாகவும், அவரே சமீபத்தில் தனது instagram பக்கத்தில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் தற்போது தனது வருங்கால மனைவியுடன் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் என்று அழைக்கப்படும் திருமணத்திற்கு முன்பு எடுக்கப்படும் போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவர் பகிர்ந்து இருக்கிறார். எரும சாணி என்கிற youtube சேனலை தொடங்கி அதன் மூலமாக பிரபலமானவர் நடிகர் விஜய். இவரின் நகைச்சுவை பேச்சும் நடிப்பும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனது. குறிப்பாக இவருக்கு பெண் ரசிகைகள் அதிகமாக இருக்கின்றனர். சின்னத்திரையில் தனது வாழ்க்கையை தொடங்கிய அவர் அடுத்து வெள்ளி திரைக்கு தனது கவனத்தை திருப்பினார். ஹிப் ஹாப் ஆதி தமிழா நடித்த மீசையை முறுக்கு, நான் சிரித்தால் போன்ற படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காதலியுடன் செம்ம ரொமான்ஸ் செய்யும் எரும சா ணி விஜய்.! Pre Wedding Photoshoot நடத்திய விஜய்.! 1
அதன் பின்னர் இவருக்கு படங்கள் இயக்குவதில் ஆர்வம் அதிகமாக இருந்த காரணத்தினால் இயக்கம் பக்கம் தனது கவனத்தை திருப்பினார். அருள் நிதியை ஹீரோவாக வைத்து டி பிளாக் என்கிற தனது முதல் படத்தை இயக்கியிருந்தார். முதல் படமே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அந்தப் படத்தில் அருள் நிதியின் நண்பராக நடித்து இருந்தார் விஜய். இந்த நிலையில் சமீபத்தில் விஜய் தனது நீண்ட நாள் காதலியான நட்சத்திராவை திருமணம் செய்ய இருப்பதாக “பொண்ணு பாக்குற மொமென்ட்” என்று வீடியோவை வெளியிட்டு இருந்தார். நட்சத்திரா வீட்டில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகில் ஷேர் செய்திருந்தார். நட்சத்திராவும் மீடியா துறையைச் சேர்ந்தவர். மாடலிங், விலாக் மற்றும் ஃபேஷன் டிசைனர் என்று பன்முக திறமையாளராக இருக்கிறார் நட்சத்திரா. இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தற்போது அவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. அடிக்கடி அவுட்டிங் சென்று ஜோடியாக புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.


இருவருக்கும் எளிமையான முறையில் வீட்டிலேயே வைத்து நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது. இருவரின் நண்பர்களும் மீடியா பிரபலங்களும் விஜய்க்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். விஜயுடன் சேர்ந்து நடித்த ஹரிஜாவும் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை கூறி இருக்கிறார். இந்த நிலையில் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதால் இருவரும் இணைந்து ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் என்று அழைக்கப்படும் போட்டோ சூட்டை நடத்தி இருக்கின்றனர். அந்த வீடியோவையும் தற்போது விஜயை வெளியிட்டு இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்