இந்தியாவில் டிக் டாக் செயலி முடங்கிய பிறகு பலரும் youtube சேனல்களை ஆரம்பித்து அதன் மூலமாக வருமானம் பார்க்க தொடங்கி இருக்கின்றனர். சமையல், காதல், நட்பு, தொடர்கள், காமெடி என பல கன்டென்ட்கள் கிடைக்கும் இடமாக யூடியூப் தளம் இருக்கிறது. இதை சரியாக பயன்படுத்தி புகழடைந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் எரும சாணி விஜய். இவர் ஹரிஜா என்பவர் உடன் இணைந்து இந்த பக்கத்தை நடத்தி வந்தார். இந்த பக்கத்தில் இவர்கள் இருவர் மட்டுமே காமெடிகளை செய்து அதை வீடியோவாக பதிவேற்றி வந்தனர். குறிப்பாக கணவன் மனைவிக்குள் நடக்கும் சிறு சிறு விஷயங்களை இவர்கள் வீடியோவாக எடுத்து அதை வெளியிட்டு பிரபலமானார்கள். இவர்களின் வீடியோக்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

காதலன் காதலிக்கு இடையில் நடக்கும் குறும்புகள், கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் காமெடிகள் என இவர்கள் வீடியோ வெளியிட்டு வந்தனர். இதனால் குறுகிய காலத்திலேயே இவர்கள் இருவருமே மிகப் பிரபலமானார்கள். குறிப்பாக இவர்களின் வீடியோவுக்கு இறுதியில் ஹரிஜா சொல்லும் ” போடா எரும சாணி, கிறுக்கு பயலே” என்கிற வார்த்தை மிகப் பிரபலமாக இருந்தது. இந்த நிலையில் சில காரணங்களால் ஹரிஜா மற்றும் விஜய் இருவரும் பிரிந்து விட்டனர். தனித்தனியாக வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். விஜய் படங்களை இயக்குவதில் பிஸியாக இருந்தார் .அருள் நிதியை வைத்து டி பிளாக் என்ற படத்தையும் சமீபத்தில் அவர் இயக்கியிருந்தார்.
தற்போது விஜய்க்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. அந்த புகைப்படங்களை தனது instagram பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். தனது பல நாள் காதலியான நட்சத்திராவை அவர் கரம் பிடிக்க இருக்கிறார். மேலும் பெண் பார்க்க சென்ற இடத்தில் அவர் செய்யும் சேட்டைகளையும் வீடியோவாக பதிவேற்றி இருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..