வீட்டை விட்டு வெளிய போடி.! உமையாளை அலறவிட்ட ஈஸ்வரி.! ப்ரோமோ இதோ.!

வெளியிட்டது

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் திமிராக பேசிக் கொண்டிருந்த உமையாள் மீது ஆங்காரம் வந்த காளியாக ஈஸ்வரி மாறி கத்திக் கொண்டிருக்கிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. சித்தார்த் தர்ஷினி திருமணத்திற்கு வீட்டில் உள்ள அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ரகசியமாக இவர்கள் இருவரும் திருமணத்தை முடிக்க குணசேகரன் மற்றும் உமையாள் திட்டமிட்டு வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வீட்டை விட்டு வெளிய போடி.! உமையாளை அலறவிட்ட ஈஸ்வரி.! ப்ரோமோ இதோ.! 1

இந்த நிலையில் சித்தார்த் திடீரென காணாமல் போய்விடுகிறார். அவரை கதிர் கடத்தி வைத்திருக்கிறார். இதனால் திருமணம் நடைபெறாமல் பாதியிலேயே நின்று போகிறது. வீட்டிற்கு வரும் குணசேகரன் ராமசாமி கிருஷ்ணசாமியிடம் சித்தார்த் இல்லாமல் வீட்டிற்கு வரக்கூடாது என உத்தரவு போடுகிறார். இந்த நிலையில் சித்தார்த்தை தேடி ஒரு புறம் ராமசாமி, கிருஷ்ணசாமி அலைந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது அவர்கள் செல்லும் காரை பின் தொடர்ந்து கதிர் ஜனனி மற்றும் கொற்றவை ஆகியோர் பின் தொடர்ந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் வீட்டில் இருக்கும் தர்ஷினியை தான் பார்த்துக் கொள்வதாகவும், அனைவரையும் வெளியேறும்படி உமையாள் கூறிக் கொண்டிருக்க, ஈஸ்வரி கோபம் அடைந்து கத்துகிறார். அவரின் கோபத்தை பார்த்த உமையாள் அப்படியே உறைந்து போய் நிற்கிறார். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..!  கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..! 

YouTube Video Embed Code Credits: Sun Tv

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்