குழந்தைகளுக்கு பரதம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியராக மாறிய ரேணுகா.! எதிர்நீச்சல் ப்ரோமோ.!

வெளியிட்டது

எதிர்நீச்சல் சீரியலில் தற்போது சூப்பரான ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் ஆதி குணசேகரன் வீட்டில் இரண்டாவது மருமகளாக இருக்கும் ரேணுகா தற்போது பள்ளியில் பரதநாட்டிய ஆசிரியராக வேலைக்கு சேர்ந்திருக்கிறார். அந்த சூப்பரான ப்ரோமாவை தற்போது சன் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது. இந்த ப்ரோமோவை பார்த்த பலரும் இப்போதுதான் இந்த சீரியல் நன்றாக சென்று கொண்டிருப்பதாக கமெண்ட்களை போட்டு வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு பரதம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியராக மாறிய ரேணுகா.! எதிர்நீச்சல் ப்ரோமோ.! 1

ஆணாதிக்க மனப்பான்மை கொண்ட ஆண்களை திருமணம் செய்து கொண்டு வரும் மருமகள்கள் அந்த வீட்டில் எவ்வளவு துயரங்கள் அனுபவிக்கிறார்கள் என்றும், அந்த துன்பத்திலிருந்து மீண்டு தங்களுடைய கனவை நோக்கி எவ்வாறு அவர்கள் பயணிக்க போகிறார்கள் என்ற விறுவிறுப்புடன் தற்போது இந்த கதை நகர்ந்து வருகிறது.

இதில் ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி, ஜனனி என்று நான்கு மருமகள்களும் படித்தவர்கள்தான். ஈஸ்வரி பேச்சாளர் மற்றும் வசனகர்த்தாவாக இருந்தவர். ரேணுகா பரதநாட்டிய கலைஞர். நந்தினி டெக்ஸ்டைல் இன்ஜினியர் மற்றும் ஜனனி ஒரு எம்பிஏ பட்டதாரி ஆவார். இப்படி இருக்க இவர்கள் தங்களது கனவுகளை புதைத்துக் கொண்டு ஆதி குணசேகரன் வீட்டு அடுப்பங்கறையில் இத்தனை காலமாக முடங்கி கிடந்தனர். தற்போது இவர்களுக்குள் ஒரு புரட்சி ஏற்பட்டு ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த பணிகளை செய்ய தொடங்கி இருக்கின்றனர். ஈஸ்வரி குடும்பத்திற்கு தெரியாமல் தனது பேச்சு திறமை மூலம் மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அடுத்தடுத்து இருக்கும் மருமகள்களும் தங்களுக்கு பிடித்த வேலைகளை செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் இரண்டாவது மருமகளாக இருக்கும் ரேணுகா தற்போது பள்ளியில் குழந்தைகளுக்கு பரதநாட்டியம் சொல்லிக் கொடுக்கிறார்.

ரேணுகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரியதர்ஷினி உண்மையாகவே ஒரு பரதநாட்டிய கலைஞர. ஆவார். எனவே அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வண்ணம் பள்ளி குழந்தைகளுக்கு பரதநாட்டியம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியராக தனது கனவை நோக்கி பயணிப்பது போன்று கதையை இயக்குனர் திருச்செல்வம் நகர்த்தி இருக்கிறார். இதை பார்த்த பலரும் கதை நன்றாக சென்று கொண்டிருக்கிறது. அதே போல் நந்தினியும் தனக்கு பிடித்த வேலையை செய்யவும், ஜனனியும் தனது திறமையை பயன்படுத்தி தொழில் தொடங்கவும் வேண்டும் என்று தங்களது ஆசைகளை தெரிவித்து வருகின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்