எதிர்நீச்சல் சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் நேற்று அப்பத்தாவை காணவில்லை என்று சொல்லி தேடிக்கொண்டிருந்த நிலையில் இந்த அப்பத்தா ஜனனி ஜீவானந்தம் என அனைவரும் ஒன்றாக இணைந்து இருக்கின்றனர். இதை பார்த்த குணசேகரன் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தம் யார்? அவருக்கும் அப்பத்தாவிற்கும் என்ன தொடர்பு ஏன் அவர் அப்பத்தாவின் 40 சதவீத பங்குகளை எடுத்துக் கொள்ள நினைக்கிறார் என்பதெல்லாம் கதையில் திருப்பங்களுக்கு மேல் திருப்பங்களாக இருந்து வந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜீவானந்தமை கொலை செய்ய குணசேகரன் ஆட்களை அனுப்புகிறார். ஆனால் தவறுதலாக ஜீவானந்தத்தின் மனைவி துப்பாக்கி சூட்டில் பலியாகிறார். ஜீவானந்தம் நல்லவர் என்பதை மட்டும் புரிந்து கொள்ளும் ஜனனி, மீண்டும் வீட்டிற்க்கே திரும்பி வருகிறார். வீட்டில் ஒரு பக்கம் இத்தனை நாள் படுக்கையில் இருந்து விட்டு அப்பத்தா தற்பொழுது கண் முழித்து இருக்கிறார். இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஜீவானந்தம் ஜனனி அப்பத்தா மூவரும் ஒரு இடத்திற்கு சென்று இருக்கின்றனர்.
அந்த இடத்திற்கு குணசேகரன் மற்றும் ஞானசேகரன் இருவரும் வருகை தந்திருக்கின்றனர். அப்போது அப்பத்தா ஜீவானந்தம் ஒன்றாக இருப்பதை குணசேகரன் பார்த்து விடுகிறார். அவர்களுக்குள் சண்டை வருகிறது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV