சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலின் நாளைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் விசாலாட்சியை எதிர்த்து கேள்விக் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கும் ஜனனியை பார்த்து விசாலாட்சி கோபத்தில் கத்துகிறார். அதேபோல இன்னொரு புறம் ஆதிரை தான் எஸ்கேஆர் வீட்டில் இருந்து வரமாட்டேன் என்று சொல்லி அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார். அங்கு போலீசார் வந்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. ‘எதிர்நீச்சல்’ சீரியலில் தற்போது ஆதிரை கரிகாலன் கட்டிய தாலியை அறுத்து எறிந்து விட்டு எஸ்கேஆர் வீட்டிற்கு செல்கிறார். அங்கு பிரச்சனைகள் ஏற்பட்டு போலீசார் எஸ்கேஆரின் வீட்டிற்க்கே வந்து விடுகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது போலீசாரிடம் ஆதிரை நான் இவர்களுடன் செல்ல போவதில்லை என்று கூறி விடுகிறார். பின்னர் வீட்டிற்கு வரும் குணசேகரனிடம் ஜனனி கோபமாக கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார். மேலும் விசாலாட்சியிடம் ஆட்களை வைத்து அருணின் காலை உடைத்துப் போட்டது உங்கள் மகன்தான், அதேபோல் உங்கள் மாமியாரை கொன்றதும் உங்கள் மகன்தான் அவரை ஏதும் கேட்க மாட்டீர்களா? என்று கூறிக் கொண்டிருக்கிறார். அப்போது கோபமடைந்த விசாலாட்சி பயங்கரமாக ஜனனியைப் பார்த்து கத்துகிறார். இந்த கூத்துக்களை எல்லாம் பார்க்கும் ஜான்சி ராணி கரிகாலனை அழைத்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியேறி வாசலில் நின்று கொண்டு தர்ணா செய்கிறார்.
வெளியே வரும் குணசேகரன் ஜான்சிராணியிடம், “உனக்கு நடந்த தவறுக்காக நான் இதை செய்கிறேன்” என்று சில தகவல்களை கூறுகிறார். அதைக் கேட்ட ஈஸ்வரி மற்றும் ஜனனி ஆகியோர் அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர். அவர் அப்படி கரிகாலனிடம் என்ன சொன்னார்? என்பது குறித்து நாளை எபிசோடில் தெரியவரும். நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV