பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் கூல் சுரேஷ் தனது நீண்ட கால நண்பரான சந்தானத்தை நேரில் சென்று சந்தித்திருக்கிறார். கூல் சுரேஷை வரவழைத்து சந்தானமும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகர் கூல் சுரேஷ். இவர் பல படங்களில் காமெடி நடிகராக பணியாற்றி இருக்கிறார். சிம்புவின் தீவிர பக்தரான இவர், சிம்பு நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்காக மிகப்பெரிய அளவில் பிரமோஷன் செய்தார். மற்றவர்களின் படங்களை பார்த்துவிட்டு வெளியே வந்து ரிவியூ கூறும் சுரேஷ், ‘வெந்து தணிந்தது காடு’ என்று சொல்லிவிட்டு அந்த படத்தின் பெயரை கூறி வணக்கத்தை போடு என்று சொல்லியதன் மூலமாக மிகப் பிரபலமானார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் இணையத்தில் பல சர்ச்சையான செயல்களை செய்து வைரலான நபராக மாறி இருந்தார். பெண் தொகுப்பாளனி கழுத்தில் அவரது அனுமதி இல்லாமல் மாலை போடுவது, அதிதி சங்கரை தனது மனைவி என்று கூறியது போன்ற காரணங்களால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். இதனால் அவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்து போனது. இந்த நிலையில் கூல் சுரேஷுக்கு பிக் பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சீசன் 7ல் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். 77 நாட்கள் விளையாடி வந்த அவர் கடந்த வாரம் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டு அனுப்பப்பட்டு இருக்கிறார்.

சுவாரசியம் குறைவு, ஆர்வமின்மை, வீட்டு ஞாபகம் ஆகிய காரணங்களால் இவர் சுவர் ஏறி குதித்து வெளியேற முயற்சி செய்தார். அதனால் இவரை பிக் பாஸ் குழுவினர் வீட்டில் இருந்து எலிமினேட் செய்து அதிர்ச்சி கொடுத்திருந்தனர். வெளிய வந்த பின்னர் அவர் முதல் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் நேராக சென்று தனது நண்பன் சந்தானத்தை சந்தித்து அதை வீடியோவாக பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O