வீடியோ காலில் நீதிபதி முன்பு தோன்றிய தர்ஷினி..! மருமகள்களுக்கு எதிராக சாட்சி சொன்ன தர்ஷினி..!

வெளியிட்டது

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது காணாமல் போன தர்ஷினி நீதிபதியின் முன்பாக வீடியோ காலில் தோன்றி பேசுகிறார். “அவர் கூறிய வார்த்தைகள் தங்களை பெரு வெள்ளத்தில் மூழ்கடித்து விட்டதாகவும், அந்த வார்த்தைகளை கேட்க நீங்களும் உங்கள் மனதை கல்லாக்கி கொள்ளுங்கள்” என்று ஜனனி கூறுவது போன்ற ப்ரோமோவை சீரியல் குழுவினர் தற்போது வெளியிட்டு இருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வீடியோ காலில் நீதிபதி முன்பு தோன்றிய தர்ஷினி..! மருமகள்களுக்கு எதிராக சாட்சி சொன்ன தர்ஷினி..! 1

ஆதி குணசேகரனின் மகளாக இருக்கும் தர்ஷினி காணாமல் போய் சில நாட்கள் ஆகிறது. அவரைத் தேடி மருமகள்கள் அலைந்து கொண்டிருந்த நிலையில், மருமகள்கள் தான் தனது மகளை ஒளித்து வைத்து நாடகம் ஆடுவதாக குணசேகரன் போலீசில் புகார் அளிக்கிறார். எனவே போலீசார் மருமகள்கள் மற்றும் ஜீவானந்தமை கைது செய்து வழக்கு விசாரணைக்காக சிறையில் அடைகின்றனர். மேலும் சிறையில் அவர்களை போலீசார் அடித்து துன்புறுத்துகின்றனர் இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் நீதிபதி முன்பு ஒரு டிவி வைக்கப்படுகிறது. அதில் தர்ஷினி தோன்றி வீடியோவில் பேசுகிறார்.


அப்போது பின்னணியில் ஜனனியின் குரல் ஒலிக்கிறது. ஜனனி பேசும் பொழுது, “தர்ஷினி வீடியோவில் தோன்றி சில உண்மைகளை கூறுகிறார். அவர் கூறிய வார்த்தைகள் எங்களை வெள்ளத்தில் மூழ்கடிக்க வைத்து விட்டது. நீங்களும் அந்த வார்த்தைகளை கேட்க உங்கள் மனதை கல்லாக்கிக் கொள்ளுங்கள்” என்று கூறுவது போன்ற வீடியோ வெளியாகி இருக்கிறது. எனவே தர்ஷினி வீடியோவில் தன்னை தனது தாயார் மற்றும் சித்திகள் இணைந்து தான் கடத்தி வைத்திருக்கிறார்கள் என்று சொல்லப் போகிறாரோ? என்கிற அச்சம் எழுந்துள்ளது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்