சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது ஈஸ்வரியின் நடத்தையை அசிங்கமாக பேசும் தர்ஷனை ஈஸ்வரி ஓங்கி ஒரு அறை விடுகிறார். இந்த தருணத்திற்காக தான் பலரும் காத்திருந்தனர். மேலும் ஆதி குணசேகரனை விவாகரத்து செய்யும் முடிவையும் ஈஸ்வரி எடுக்கிறார். இதனால் கதையில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரேணுகாவின் தாயார் பதினைந்து லட்சம் ரூபாயை ஞானத்திடம் கொண்டு வந்து கொடுக்கிறார் ஆனால் ஞானம் அதை கரிகாலனை நம்பி புதிய தொழில் தொடங்கி ஏமார்ந்து விடுகிறார். அதே சமயம் ஈஸ்வரி, ஆதி குணசேகரனை விவாகரத்து செய்யும் முடிவை எடுக்கிறார். இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் ஈஸ்வரியிடம் தர்ஷன், தர்ஷினியை ஜீவானந்தத்துடன் அனுப்பி விட்டாய், தற்போது நீயும் அந்த ஜீவானந்தத்துடன் செல்ல பார்க்கிறாயா? என கேவலமாக பேசுகிறார்.

இதனால் கோபத்தின் உச்சிக்கே செல்லும் ஈஸ்வரி தர்ஷனை ஓங்கி ஒரு அறை விடுகிறார். இந்த தருணத்தை தான் நாம் அனைவரும் எதிர்பார்த்திருந்தோம் என சொல்லி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV