இயக்குனர் கார்த்தி யோகி, இயக்கத்தில் டி விஸ்வ பிரசாத் சார்பில் பீப்புள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் தயாரித்திருக்கும் திரைப்படம் தான் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. தற்போது இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர் நடிகர் சந்தானம், மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி, எம் எஸ் பாஸ்கர், மாறன், மொட்ட ராஜேந்திரன், சேசு ஆகிய பலர் நடிப்பில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. இந்தப் படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. திரை விமர்சகர்கள் பலரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கிராமத்தில் இருக்கும் மக்களிடையே மூடநம்பிக்கைகள் பரவலாக இருப்பதை அறிந்து கொள்கிறார் ஹீரோ சந்தானம். பின்னர் தன்னுடைய நிலத்தில் நடக்கும் ஒரு அதிசயத்தை மையமாக வைத்து கோவில் ஒன்றைக் கட்டி பணம் பார்த்து வருகிறார். அப்போது அந்த ஊருக்கு வரும் தாசில்தார் கோவிலின் சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்கிறார். அதன் பின்னர் என்ன நடந்தது? கோவிலின் சொத்துக்களை தாசில்தார் அபகரித்தாரா? சந்தானம் என்ன செய்தார்? என்ற கதையை காமெடியுடன் சொன்ன திரைப்படம் தான் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. இந்தப் படம் ரசிகர்களையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் வீடியோவாக வெளியிட்டு இருக்கின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Moviebuff Tamil