தமிழ்நாட்டின் நம்பர் 1 சீரியல் என மீண்டும் நிரூபித்த எதிர்நீச்சல் சீரியல்.! இதுதான் காரணமா?

வெளியிட்டது

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது எந்த சீரியலும் செய்ய முடியாத அளவிற்கு புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தி காட்டி இருக்கிறது. மீண்டும் தமிழ்நாட்டின் நம்பர் ஒன் சீரியல் என்பதை இந்த நாடகம் நிரூபித்து இருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் ஆதிரை கரிகாலனின் திருமணம்தான் என்று கூறப்படுகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலில் ஒன்று தான் எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு என்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. படித்த பெண்களை திருமணம் செய்து கொள்ளும் ஆண்கள் அவர்களை அடக்கி ஆள நினைப்பதும், அவர்களுக்கு எதிராக பெண்கள் புரட்சிகரமாக பேசுவதும் இந்த சீரியலின் வெற்றிக்கு மற்றொரு காரணமாக இருக்கிறது. குறிப்பாக ஆதி குணசேகரன், ரேணுகா, நந்தினி, ஜனனி ஜான்சி ராணி, கரிகாலன், ஆதிரை ஆகியோர் தற்போது இந்த நாடகத்தை விறுவிறுப்பாக்கி வருகின்றனர். தற்போது கதைப்படி ஆதி குணசேகரனின் தங்கையாக இருக்கும் ஆதிரைக்கும் கரிகாலனுக்கும் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.

தமிழ்நாட்டின் நம்பர் 1 சீரியல் என மீண்டும் நிரூபித்த எதிர்நீச்சல் சீரியல்.! இதுதான் காரணமா? 1
இயக்குனர் திருச்செல்வம் இயக்கம் என்றாலே அது ஒரு தனி ரகம்தான். அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலும் இயக்குனர் திருச்செல்வத்தின் கைவண்ணத்தில் தற்போது டாப் ஹிட் தொடராக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் தற்போது ஹாட் டாப்பிக் என்னவென்றால் அதிரை மற்றும் கரிகாலன் திருமணம்தான். ஆதிரை அருண் என்பவரை காதலித்து வர அவரிடமிருந்து ஆதிரையை மீட்டு ஜான்சி ராணியின் மகன் கரிகாலனுக்கு ஆதி குணசேகரன் திருமணம் செய்து வைத்து விடுகிறார். நடுரோட்டில் நடந்த இந்த திருமண காட்சிகள் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருந்தது. அருணை திருமணம் செய்து வைக்காமல் கரிகாலனை திருமணம் செய்து வைத்துதால் இயக்குனர் மீது ரசிகர்களுக்கு கோபம் இருந்த போதிலும் இந்த விறுவிறுப்பான காட்சிகள் தற்போது புதிய சாதனையை படைத்திருக்கிறது. ஆதிரையின் திருமணம் ஒளிபரப்பான கடந்த வாரம் முழுவதும் எதிர்நீச்சல் சீரியல் 11.16 டிஆர்பி ரேட்டிங் பெற்று இருக்கிறது.


டிஆர்பி ரேட்டிங்கில் அடிப்படையில் தான் ஒரு சீரியலின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் 11.16 புள்ளிகளை பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பெற்றிருக்கிறது எதிர்நீச்சல் சீரியல். இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் எந்த தொடருமே இத்தகைய டிஆர்பி ரேட்டிங்கை பெறவில்லை. முதல் முறையாக சன் தொலைக்காட்சியின் எதிர்நீச்சல் சீரியல் இவ்வளவு அதிக ரேட்டிங் பெற்ற முதல் சீரியல் என்ற சாதனையை படைத்திருக்கிறது. இதனால் ரசிகர்கள் எதிர்நீச்சல் சீரியல் குழுவிற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கும் இந்த தொடரில் அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்கிற சஸ்பென்ஸ் உடன் நாடகம் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்