வீட்டை பார்த்ததும் மனம் உடைந்து போய் கதறி அழுத குணசேகரன்.! பாவப்படும் மருமகள்கள்.!

வெளியிட்டது

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. அந்த வீடியோவில் தற்போது ஆதி குணசேகரன் மற்றும் அவரது தம்பிகள் அனைவரும் அமர்ந்து சோகமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். மேலும் ஆடிட்டரும் அவர்களுக்கு புது அறிவுரையை அவர்களுக்கு கூறிக் கொண்டிருக்கிறார். பின்னர் வீட்டிற்கு வரும் ஆதி குணசேகரன் வீட்டைப் பார்த்து கதறி அழுகிறார். சின்னத்திரை உலகில் டாப் ஹிட் சீரியல்களில் ஒன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது எதிர்நீச்சல் சீரியல். சன் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.

வீட்டை பார்த்ததும் மனம் உடைந்து போய் கதறி அழுத குணசேகரன்.! பாவப்படும் மருமகள்கள்.! 1
தற்போது இந்த கதையின் விறுவிறுப்புக்கு முக்கிய காரணமாக இருப்பது ஆதி குணசேகரனின் 40 சதவீத பங்குகள் ஜீவானந்தத்தின் பெயருக்கு மாறியது தான். ஆதி குணசேகரன் தனது அப்பத்தா பட்டம்மாளுக்கு தன்னுடைய சொத்தில் 40 சதவீத பங்கை எழுதி வைத்திருந்தார். ஆதிரையின் திருமணத்திற்கு சம்மதித்தால் 40% பங்கு தருவதாக அப்பத்தா உறுதியளித்த நிலையில், அப்பத்தாவை ஏமாற்றி 40 சதவீத பங்குகளை பிடுங்கி விட்டார் ஆதி குணசேகரன். ஆனால் திடீரென கதையில் திருப்பமாக அந்த 40 சதவீத பங்குகளும் ஆதி குணசேகரனுக்கு இல்லை என்றும், அதை சமூக ஆர்வலர் ஜீவானந்தம் எடுத்துக் கொண்டதாகவும் கதையில் ட்விஸ்ட் கொடுத்தனர்.

ஜீவானந்தம் யார் என்றே தெரியாமல் ஒரு பக்கம் ரசிகர்கள் குழம்பிப் போய் பார்த்துக் கொண்டிருக்க, கதையிலும் அதே குழப்பம் நீடித்து வருகிறது. ஜனனியின் ஆள் தான் ஜீவானந்தம் என்று ஆதி குணசேகரன் நினைத்துக் கொண்டிருக்க, ஜனனியும் இது குணசேகரனின் ஆள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். இறுதியில் ஜீவானந்தம் அப்பத்தாவின் ஆளாக இருக்கக்கூடுமோ என்று சந்தேகம் எழுகிறது.

இப்படியாக பல கட்ட குழப்பத்தில் இருக்கும் போதிலும் எதிர்நீச்சல் சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது் இந்த நிலையில் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சொத்துக்கள் அனைத்தையும் இழந்த ஆதி குணசேகரன் மரத்தடியில் அமர்ந்து சோகமாக பேசிக் கொண்டிருக்கிறார்.அப்போது எந்த ஜனனியால் இந்த சொத்துக்கள் அனைத்தும் போனதோ, அதே ஜனனியை வைத்து மீண்டும் இந்த சொத்துக்களை நான் எடுக்கிறேன் பாருங்கள் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

 

இன்னொரு புறம் ஜனனி அப்பத்தா அருகில் அமர்ந்து அழுது கொண்டிருக்கிறார். அந்த ஜீவானந்தம் நல்லவன் கிடையாது, அவன் நம்மை ஏமாற்றி விட்டான். நாம் அவனிடம் தோற்று விட்டோம் என்று சொல்லி அழுது கொண்டிருக்கிறார். பின்னர் வீட்டிற்கு வரும் குணசேகரன் வீட்டை பார்த்ததும் கண்ணீர் விட்டு கதறி அழுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது் பலரும் வில்லன் அழும் பொழுது நம்மை வருத்தப்பட வைக்கும் ஒரே ரசிகர்களை பெற்றது குணசேகரன் தான் என்று அவருக்கு பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.!

Youtube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்