அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத அளவிற்கு பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது சன் தொலைக்காட்சியில் ‘எதிர்நீச்சல்’ சீரியல். இந்த சீரியலில் தற்போது கதைப்படி அப்பத்தா சென்ற கார் குண்டு வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் அப்பத்தாவின் எரிந்த புடவை மட்டுமே ஜனனிக்கு கிடைத்ததால், அப்பத்தா இறந்து விட்டதாக அவர் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார். மேலும் வீட்டிற்கு வரும் ஜனனி, நந்தினி மற்றும் ரேணுகாவிடம் அப்பத்தாவை இவர்கள் அனைவரும் இணைந்து கொலை செய்து விட்டதாக கூறி அழுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஜீவானந்தம் ஏற்பாட்டில் கௌதமின் பாதுகாப்புடன் அப்பத்தா உயிருடன் இருப்பார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் விசாலாட்சி மற்றும் ஞானத்திடம் சக்தி கோபமாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது, “ஜீவானந்தத்தின் மனைவியை கொன்றது உன் பிள்ளை தான். அதை முதலில் போய் கேளு” என்று சொல்லி உண்மைகளை போட்டு உடைத்து விடுகிறார். இதனால் விசாலாட்சியும் ஞானமும் அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர். பின்னர் ஞானம் கோபமாக எழுந்து, “எல்லாரும் சேர்ந்து நாடகம் ஆடுறீங்களா” என்று கத்துகிறார்.

இதனால் கோபமடைந்த ரேணுகா_ ஞானத்தை பார்த்து “உங்க அண்ணன் வேட்டியை பிடித்துக் கொண்டே சுத்துறில்ல, ஜீவானந்தம் பொண்டாட்டியை கொன்றது யார்ன்னு அந்த ஆளிடமே போய் கேளு என்று பதிலுக்கு கத்துகிறார். அத்துடன் இந்த ப்ரோமோ நிறைவடைகிறது. நீங்களும் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV