சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் சொத்துக்கு ஆசைப்பட்டு கதிர் தனது அண்ணனையே கொலை செய்துவிட்டார் என்று ஜனனி பகீர் குற்றச்சாட்டை கூறுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஈஸ்வரி கதிரின் சட்டையை பிடித்து அவர் எங்கே இருக்கிறார் என்று சொல் நான் போய் அவரை தேடி கண்டுபிடித்து வருகிறேன் என்று கோபத்தில் கத்துகிறார். இந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எதிர்நீச்சல் சீரியலில் நாளுக்கு நாள் விறுவிறுப்பான கட்டங்கள் நடந்து வருகிறது. ஈஸ்வரியை தவறாக பேசிய கதிரை ஈஸ்வரி அடித்து துவைத்து இருக்கிறார். இதனால் கதிர் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்று கொண்டிருக்கிறார். அந்த அதிர்ச்சியே தாங்காத நிலையில் தற்போது புது குண்டை ஜனனி தூக்கி போடுகிறார். அதில் சொத்துக்கு ஆசைப்பட்டு கதிர் தான் ஆதி குணசேகரனை கொலை செய்துவிட்டார். செருப்பை தூக்கிக் கொண்டு வந்து நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறார் என்று பகீர் குற்றச்சாட்டை கூறுகிறார். அப்போது ஈஸ்வரி என் கணவர் இருக்கும் இடத்தை சொல் நான் சென்று அவரை கூட்டி வருகிறேன் என்று சொல்ல விசாலாட்சி ஈஸ்வரியை வார்த்தைகளால் காயப்படுத்துகிறார்.
அவனை வீட்டில் இருந்து அனுப்பியது போதாது என்று நேரில் சென்று அவன் உயிரை வாங்கப் போகிறாயா என்று ஈஸ்வரியை பார்த்து கேட்கிறார். இதனால் ஈஸ்வரி கலங்கிய கண்களுடன் நின்று கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV