“ஒரு ஆம்பளைய எப்படி கைநீட்டி அடிப்ப?” ஈஸ்வரி கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்ட ஆதி குணசேகரன்.!

வெளியிட்டது

எதிர்நீச்சல் சீரியலில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஆதி குணசேகரன், எப்படி என் தம்பியை அடிப்பாய்? என்று சொல்லி ஈஸ்வரி கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விடுகிறார். இதனால் வீட்டில் பிரச்சனை எழுகிறது. மாரிமுத்து மறைவுக்கு பின்னர் யார் ஆதி குணசேகரனாக நடிக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. அதை வேலராமமூர்த்தி தற்போது பூர்த்தி செய்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு வேலராமமூர்த்தி ஆதி குணசேகரனாக அறிமுகப்படுத்தியிருந்தது எதிர்நீச்சல் சீரியல் குழு. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"ஒரு ஆம்பளைய எப்படி கைநீட்டி அடிப்ப?" ஈஸ்வரி கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்ட ஆதி குணசேகரன்.! 1
ஆனால் மாரிமுத்துவின் அந்தக் கோபமும், தொண்டை கனைப்பும், குரலில் கம்பீரமும் வேலராமமூர்த்தியிடம் இல்லை என்று சொல்லி ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இன்னும் சிலரோ அவர் நடிக்க வந்து இரண்டு நாட்கள் தான் ஆகியிருக்கிறது அவருக்கு கொஞ்சம் நேரம் கொடுத்து பார்க்கலாம் என கூறி வருகின்றனர். இந்த நிலையில் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. அதில் வீட்டிற்கு வரும் ஆதி குணசேகரனிடம் ஈஸ்வரி தன்னை அறைந்து விட்டதாக கதிர் புகார் கொடுத்தார். இதனால் கோபத்தின் உச்சியில் இருக்கும் ஆதி குணசேகரன் எப்படி என் தம்பி மீது கை வைப்பாய் என்று சொல்லி ஈஸ்வரியை அடிக்கிறார்.


இதனால் வீட்டில் மீண்டும் சண்டை எழுந்துள்ளது. அந்த நேரத்தில் அப்பத்தாவும் வருகை தந்திருக்கிறார். ஜீவானந்தம் மற்றும் அப்பத்தாவின் கதையை திருவிழாவில் வைத்து முடிக்க ஆதி குணசேகரன் திட்டமிட்டுள்ளார். இதனால் அடுத்து என்ன நடக்குமோ என்கிற பரபரப்பு எழுந்துள்ளது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்