சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா மற்றும் நந்தினியாக நடித்து வரும் பிரியதர்ஷினியும் ஹரி பிரியாவும் இணைந்து மாலைப் பொழுதின் மயக்கத்திலே பாடலுக்கு தற்போது நடனமாடி அதை வீடியோவாக வெளியிட்டு இருக்கின்றனர். அந்த வீடியோவிற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. சின்னத்திரை உலகில் தவிர்க்க முடியாத ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகிறது எதிர்நீச்சல் சீரியல். 4 அண்ணன் தம்பிகளின் மனைவிகளுக்கு இருக்கும் பாசத்தையும் ஒற்றுமையும் இந்த நாடகம் பிரதிபலித்து வருவதால் இந்த சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் பெருகிக்கொண்டே செல்கின்றனர். தற்போது கதையில் ஜீவானந்தம் யார்? அவருக்கும் அப்பத்தாவிற்கும் என்ன தொடர்பு? ஏன் அவர் அப்பத்தாவின் 40 சதவீத பங்குகளை பறித்துக் கொண்டார்? அவரிடம் இருந்து எப்படி சொத்துக்களை மீட்பது? என்ற பரபரப்புடன் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடரில் இரண்டாவது மருமகளாக ரேணுகா என்கிற கதாபாத்திரத்தில் பிரபல தொகுப்பாளனியாக இருக்கும் டிடியின் அக்கா பிரியதர்ஷினியும், மூன்றாவது மருமகளாக நடிகை ஹரி பிரியா நந்தினி என்கிற கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். இந்த நாடகத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு நந்தினி மற்றும் ரேணுகா இருவரும் காரணமாக இருக்கின்றனர் என்று சொன்னால் அது மிகையில்லை. யார் வருகிறார்களோ இல்லையோ ஷூட்டிங்க்கு நாள் தவறாமல் வரும் பிரியதர்ஷினி மற்றும் ஹரி பிரியா தினமும் ஒளிபரப்பாகும் எபிசோடில் இடம் பிடித்து விடுகின்றனர். இவர்கள் இருவரின் காம்பினேஷன் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த போகவே தற்போது இந்த தொடரின் பலரின் ஃபேவரைட்டாக இருவரும் இருந்து வருகின்றனர். இதில் பிரியதர்ஷினி நிகழ்ச்சி தொகுப்பாளினி, நடிகை, பரதநாட்டிய கலைஞர், பரதநாட்டிய ஆசிரியர் என்று பன்முகத் திறமையாளராக இருந்து வருகிறார்.
அதேபோல நடிகை ஹரிப்பிரியாவும் நிகழ்ச்சி தொகுப்பாளனாகவும், நடிகையும், அதே சமயம் பரதநாட்டிய கலைஞராகவும் இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து தற்போது மாலை பொழுதின் மயக்கத்திலே என்ற பாடலுக்கு நடனமாடி அதை வீடியோவாக வெளியிட்டு இருக்கின்றனர். பிஸியான ஷூட்டிங்கிற்கு நடுவே கிடைத்த குட்டி ப்ரேக்கில் அவர் அழகாக ஆடி அந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவிற்கு பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O