முக்கியத்துவம் இல்லை.! எதிர்நீச்சல் சீரியலில் இருந்து ஒரேடியாக நீக்கப்பட்ட நடிகை.! யார் தெரியுமா?

வெளியிட்டது

எதிர்நீச்சல் சீரியலில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்று தற்போது நீக்கப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் சீரியல். தற்போது இந்த சீரியலில் ஜீவானந்தம் யார்? ஏன் அவர் அப்பத்தாவின் சொத்துகளை திருடிக்கொண்டார்? என்கிற விறுவிறுப்புடன் நகர்ந்து வருகிறது.

முக்கியத்துவம் இல்லை.! எதிர்நீச்சல் சீரியலில் இருந்து ஒரேடியாக நீக்கப்பட்ட நடிகை.! யார் தெரியுமா? 1

ஒருபுறம் ஜனனியும் ஜீவானந்தத்தை தேடி மலை கிராமம் ஒன்றிற்கு செல்கிறார். அதேபோல அவரை கொல்வதற்கு கதிர் மற்றும் வளவன் இருவரும் துப்பாக்கியுடன் சென்று கொண்டிருக்கின்றனர். நேற்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், ஜீவானந்தம் என் நன்மைக்காகத்தான் இவ்வாறு செய்தார் என்று அப்பத்தா ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து கொண்டிருக்கிறார்.

இது ஒரு புறம் இருக்க ஜீவானந்தம் வீட்டிற்குள் புகுந்த கதிர் மற்றும் வளவன் ஆகியோர் ஆயுதங்களுடன் போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை கம்பியால் தாக்கிக் கொண்டிருக்கிறார் ஜீவானந்தம். பின்னர் ஜன்னல் வழியாக துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கிறது. அப்போது ஜனனி அழுது கொண்டிருக்கிறார். ஜீவானந்தத்தின் மகளும் அழுது கொண்டிருக்கிறார். இப்படியான விறுவிறுப்பான கதைக்களத்துடன் தற்போது சீரியல் நடந்து வருகிறது.

இந்த நிலையில் சீரியலில் இருந்து தற்போது முக்கியமான கதாபாத்திரம் ஒருவர் நீக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தற்போது சென்று கொண்டிருக்கும் கதை களத்திற்கும் இவருக்கும் சம்பந்தம் இல்லாததால் இந்த கதாபாத்திரத்தை ஒரேடியாக நீக்கி விட்டதாக கூறப்படுகிறது.

ஜனனியின் மாமா மகளாக வாசு என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் வைஷ்ணவி. சுறுசுறுப்பான மற்றும் தைரியமான பெண்ணாக இவர் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்திருந்தார். தற்போது இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புது வசந்தம் என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருவதாலும் எதிர்நீச்சல் சீரியலில் தற்போது நடக்கும் கதை களத்திற்கும் இவரது கதாபாத்திரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதாலும் இந்த கதாபாத்திரத்தை ஒரேடியாக நீக்கிவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இது குறித்து சீரியல் குழுவினரும் எந்த அப்டேட்டையும் வெளியிடவில்லை. வைஷ்ணவியும் எந்த தகவலையும் வெளியிடாமல் இருந்து வருகிறார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்