சில நாட்களாக உயிருக்கு போராடி வந்த சீம்ஸ் நாய் இன்று உயிரிழந்துள்ள செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது 12வது வயதில் அந்த நாய் மரணமடைந்துள்ளது. மீம்ஸ் கிரியேட்டர்களின் மனம் கவர்ந்த மீம் டெம்ப்ளேட்டாக இருந்தது சீம்ஸ் ஷிபா இனு என்கிற இனத்தைச் சேர்ந்த சீம்ஸ் இணையத்தை கலக்கி வந்த நாய்களில் ஒன்றாகும். பல மீம்ஸ் கிரியேட்டர்களின் மீம் ஐக்கானாக இருந்த அந்த நாய் இன்று அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்தபோது உயிரிழந்துள்ளது. இந்த தகவல் இணையத்தையே கலங்கடித்துள்ளது. தனது 12வது வயதில் சீம்ஸ் இந்த உலகத்தை விட்டு பிரிந்துவிட்டதாக அதன் உரிமையாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அவர் வெயிட்டுள்ள அறிவிப்பில் சீம்ஸ்க்கு புற்றுநோய் இருப்பது தெரிந்து அறுவைசிகிச்சை செய்ய ஆரம்பித்தோம். அறுவை சிகிச்சைக்குப் பிறகு கீமோதெரபி அல்லது பிற சாத்தியமான சிகிச்சையை ஏற்பாடு செய்ய நாங்கள் விரும்பினோம், ஆனால் அது இப்போது மிகவும் தாமதமாகிவிட்டது.” “சோகப்பட வேண்டாம், சீம்ஸ் இந்த உலகிற்கு தந்த மகிழ்ச்சியை நினைவில் வையுங்கள். உங்களையும் என்னையும் இணைக்கும் வட்டமான சிரித்த முகத்துடன் ஒரு ஷிபா, அவர் கொரோனா தொற்றின் போது பலருக்கும் உதவியுள்ளார் மற்றும் உங்களில் பலருக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளார்.

ஆனால் இப்போது அவரது பணி நிறைவடைந்துவிட்டது என்று அந்த பதிவில் மேலும் கூறியுள்ளார். சீம்ஸின் மறைவுக்கு மீம் கிரியேட்டர்ஸ் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram