மாரிமுத்துவின் உடலை பார்த்து கதிரின் மகளாக நடித்துக் கொண்டிருக்கும் குழந்தை நட்சத்திரம் மனமுடைந்து அழுது கொண்டிருக்கிறார். அந்த காணொளியை தற்போது பலரையும் கலங்க வைத்துள்ளது. சின்னத்திரை உலகில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பலரின் மனம் கவர்ந்த சீரியலாக இருந்து வருகிறது. இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவர்தான் நடிகர் மாரிமுத்து. தேனி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த இவர் நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக சென்னைக்கு வந்து ஹோட்டல்களில் சர்வராக பணியாற்ற தொடங்கினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அவர் பின்னர் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். இரண்டு படங்களை இயக்கிய அவருக்கு இயக்கம் சரியாக கை கொடுக்காத காரணத்தினால் நடிப்பு பக்கம் தனது கவனத்தை திருப்பினார். யுத்தம் செய் என்கிற படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமான அவர், சின்னத்திரையிலும் ஒரு கலக்கு கலக்கி வந்தார். எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியது. பின்னர் கமலுடன் இணைந்து விக்ரம் படத்திலும், ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் படத்திலும் நடித்திருந்தார். தற்போது கைவசம் விழா நாயகன், இந்தியன் 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் இன்று காலையில் டப்பிங் பேசுவதற்காக சென்ற அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. தானே காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்ற நிலையில் மருத்துவமனை வாசலில் அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு நடிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் தம்பி கதிரின் மகளாக நடித்து வரும் குழந்தை நட்சத்திரம் தாரா தற்போது அவரின் உடலை பார்த்து கதறி அழத் தொடங்கி இருக்கிறார். பள்ளிக்கு சென்று விட்டு திரும்பி அவர் தனது பெரியப்பாவாக நடித்து வரும் குணசேகரன் உடலை பார்த்து கண்கலங்கி அழுதார். அந்த காணொளி பலரையும் கலங்கடித்துள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun Tv