Categories: சினிமா

உடல் எடை குறைந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போன பஹத்..வெளியான அதிர்ச்சி புகைப்படம்..

வெளியிட்டது

எர்ணாகுளத்தில் பிறந்து வளர்ந்தவர் பகத் பாசில். பகத் பாசலின் தந்தை, ஃபாசில் பிரபல இயக்குனர் ஆவார். எர்ணாகுளத்தை பூர்வீகமாக கொண்ட பகத் பாஸில் இன்று இந்தியா முழுவதும் அறியப்படும் ஓர் நடிகராக மாறிவிட்டார். கதாபாத்திரத்துக்கு ஏற்ப தனது நடிப்பை வெளிப்படுத்தும் அவரை ‘நடிப்பு அரக்கன்’ என்றெல்லாம் ரசிகர்களால் போற்றப்படுகிறார். இவர் கண்ணாலேயே நடித்து விடுவார் என்று பலர் கூறுவது உண்டு. 19ஆவது வயதில் தனது தந்தை பாசில் இயக்கிய ‘கையேதும் தூரத்’ என்ற படத்தின் மூலமாக அறிமுகம் ஆகியிருந்தார். இந்த படம் மிகப்பெரிய தோல்வி அடைந்ததால் நடிப்பில் இருந்து ஏழு ஆண்டுகள் விலகி இருந்தார். பின்னர் தனது கல்வியை தொடர்வதற்காக அமெரிக்கா சென்று விட்டார். 2009 ஆம் ஆண்டு வெளியான கேரளா கஃபே என்ற திரைப்படம் மூலமாக மீண்டும் திரைத்துறைக்கு திரும்பினார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

உடல் எடை குறைந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போன பஹத்..வெளியான அதிர்ச்சி புகைப்படம்.. 1

2013 ஆம் ஆண்டு நேர்காணல் ஒன்றில் தானும் பாடகி ஆண்ட்ரியாவும் காதலித்து வருவதாக கூறியிருந்தார். ஆனால் திடீரென நடிகை நஸ்ரியாவை திருமணம் செய்து கொண்டார். இவர் நடிப்பில் வெளிவந்த ‘கும்பலங்கி நைட்ஸ்’ படம் பெரிதும் பேசப்பட்டது. சைக்கோ கதாபாத்திரமாக நடிப்பில் அசத்தியிருப்பார். மேலும் இவர் நடித்த பெங்களூர் டேஸ், டிரான்ஸ் போன்ற படங்கள் பெரிதும் பேசப்பட்டவை ஆகும். இவர் தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் நடித்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இறுதியாக வெளிவந்த விக்ரம் படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. இந்தப் படத்தில் தனியார் அமைப்பின் உளவாளியாக இருக்கும் இவர், முகமூடி கொள்ளையர்களை தேடும் உளவாளியாக நடித்திருப்பார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததால் பகத் பாசலின் தமிழ் ரசிகர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து இருக்கிறது.

சமீபத்தில் பகத் பாசிலின் 40வது பிறந்த நாளை ஒட்டி அவருக்கு அவரது மனைவி நஸ்ரியா கேக் வெட்டி கொண்டாடிய வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது. இந்த நிலையில் பஹத்தின் சமீபத்திய புகைப்படங்கள் கவலையளிக்கும் விதமாக உள்ளன. ஆள் உடல் எடை வெகுவாக குறைந்து மெலிந்து காணப்படுகிறார். இதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. ரசிகர் ஒருவரே இன்ஸ்டாகிராமில் உடல் எடை குறைந்து காணப்படுகிறார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான ரசிகர்கள் உங்கள் உடல்நிலைக்கு என்ன ஆனது என்று கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.

Youtube Video Code Embed Credits: V News 27

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்