Categories: சினிமா

‘தர்பார்’ படத்துக்கு தயாராகி வரும் ரசிகர்கள்! நாளை முதல் திரையரங்குகளில்!!

வெளியிட்டது
‘தர்பார்’ படத்துக்கு தயாராகி வரும் ரசிகர்கள்! நாளை முதல் திரையரங்குகளில்!! 1

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த் மும்பை போலீஸ் கமிஷனராக வருகிறார். மேலும் இதில் யோகிபாபு, தம்பி ராமையா, ஸ்ரீமன் ஆகியோரும் உள்ளனர். இதையடுத்து, டிரெய்லர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி சிறந்த வரவேற்பை பெற்றன. ரஜினி இந்த படத்தில் ரவுடிகளை வதைக்கும் சண்டை காட்சிகள் டிரெய்லரில் இருந்தன. இருந்தபோதிலும் தணிக்கை குழு படத்திற்கு யூ சான்றிதழ் அளிக்கும் என்று படக்குழுவினர் எதிர்பார்த்தனர்.

இந்த படத்தில் வன்முறை அதிகம் இருப்பதாக கூறி தணிக்கை குழுவினர் யூ சான்றிதழ் அளிக்க மறுத்தது, யூ ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. தர்பார் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் நாளை வெளியாகிறது. அமெரிக்காவில் மட்டும் இன்று தர்பார் சிறப்பு காட்சியை திரையிட திட்டமிட்டு உள்ளது.

கிட்டத்தட்ட 7 ஆயிரம் திரையரங்குகளில் தர்பார் படம் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதுவரை தமிழ் படங்கள் வெளியாகாத நாடுகளிலும் தர்பார் படத்தை ரிலீஸ் செய்ய முயற்சி செய்யபட்டு உள்ளது. இந்தியாவில் மட்டும் 4 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகிறது. படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன.இந்த நிலையில், கபாலி படத்திற்காக விமானத்தில் விளம்பரம் செய்தது போல தர்பார் படத்தையும் ரஜினிகாந்த் புகைப்படத்துடன் விமானத்தில் விளம்பரம் செய்து வருகிறார்கள்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்