நடிகை கேபியும் சித்தார்த்தும் இணைந்து தற்போது லியோ படத்திலிருந்து வெளியான “நா வரவா” என்கிற பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோக்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது. தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் 67வது படமான லியோ படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடலான “நா வரவா” என்கிற பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலுக்கு பலரும் ரீல்ஸ் செய்து வரும் நிலையில் தற்போது கேப்ரியல்லாவும் சித்தார்த்தும் இணைந்து இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்து அதை தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்கள். அந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 சி என்கிற நாடகத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் கேப்ரியல்லா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் இவருக்கு மூன்று படத்தின் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் சில படங்களிலும் நடித்திருக்கிறார். ஜோடி நம்பர் ஒன் போன்ற நடன நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்திருக்கிறார் கேபி. பிக்பாஸ் சீசன் 4ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் இறுதி வரை வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பாராத விதமாக பாதியிலேயே வெளியேறினார். இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஈரமான ரோஜாவே பாவம் இரண்டு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் அவர் காவியா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது கதைப்படி காவியா கர்ப்பமாக இருக்கிறார். இந்த செய்தியை அவர் வீட்டில் உள்ள அனைவரிடமும் மறைக்க நினைக்கிறார். ஆனால் எப்படியோ வீட்டில் உள்ள அனைவருக்கும் காவியா கர்ப்பமாக இருக்கும் செய்தி கிடைக்கிறது. இதனால் இவரது கணவரான பார்த்திபன் மற்றும் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் கேபி நடனமாடி அதை வீடியோவாக வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.அந்த வகையில் தற்போது லியோ படத்திலிருந்து வெளியான முதல் சிங்கிள் பாடலான “நா வரவா” என்கிற பாடலுக்கு அவரது கணவராக பார்த்திபன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சித்தார்த்துடன் இணைந்து கருப்பு நிற உடையில் நடனமாடி இருக்கிறார். அந்த வீடியோவிற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O