விஜய் டிவியில் குழந்தை நட்சத்திரமாகி அறிமுகம் ஆனவர் கேபிரியல்லா. இவர் பள்ளிக்கூடத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 7C என்ற நாடகத்தில் நடித்தார். பின்னர் மூனு படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக வாய் பேச முடியாதவராக நடித்து அசத்தியிருப்பார் கேபி. இதனால் அவருக்கு சமுத்திர கனியின் அப்பா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் பட வாய்ப்புகள் வெகுவாக குறைந்துவிடவே பிக்பாஸில் கலந்து கொண்டார். பிக்பாஸ் சீசன் 4ல் சில நாட்களே அவரால் தொடர முடிந்தது. மக்கள் ஆதரவு இல்லாத காரணத்தால் அவர் வீட்டை விட்டு வெளியேறினார்.

பிக்பாஸுக்குப் பிறகும் வாய்ப்புகள் ஒன்றும் கிடைக்காத காரணத்தால் கிளாமர் போட்டோஷூட்டுகளை நடத்தி வந்தார். பிறகு அவருக்கு ஈரமான ரோஜாவே 2 என்னும் நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் காவ்யா என்னும் கேரக்டரில் நடித்து வருகிறார் கேபி. மக்களும் கேபியை ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் தனக்கு வந்த பட வாய்ப்புகள் பற்றி பேட்டி ஒன்றில் கேப்ரியல்லா கூறியுள்ளார். அதில் பாலா சாரின் படமான தாரை தப்பட்டை பட வாய்ப்பு வந்ததாகவும், அதில் நடிக்க தான் ஆசையாக இருந்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் சில காரணங்களால் அதில் நடிக்கும் வாய்ப்பு கை நழுவி சென்றுவிட்டதாகவும் கேபி கூறினார்.

பிறகு தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது என்றும், ஆனால் அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்ததால் படிப்புதான் முக்கியம் என்று அந்த பட வாய்ப்பை வேண்டாம் என மறுத்துவிட்டேன் என்றும் அவர் கூறினார். மேலும் விஜய் சார் படத்தில் நடிக்க முடியவில்லையே என்று மிகவும் வருந்தியதாகவும் அவர் கூறினார். இந்த பேட்டியை பார்த்த நெட்டிசன்கள் என்ன கேபி கலர் கலரா ரீல் விடுற என்று அவரை கலாய்த்து வருகின்றனர்.