Categories: சினிமா

திரையரங்கை திருவிழாவாக்கிய GOAT படத்தின் OTT ரிலீஸ் எப்போ தெரியுமா..? வெளியான தகவல்..!

வெளியிட்டது

சிறுவர்கள் முதல் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசிகர்களாக கொண்ட நடிகர் விஜய். தனது படத்தின் மூலம் பலரையும் தனது தீவிர ரசிகர் ஆக்கி இருக்கிறார் விஜய். தற்போது அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் இவர் சினிமாவை விட்டுவிட்டு அரசியலில் களம் இறங்க இருக்கிறார். இவ்வளவு பெரிய மார்க்கெட்டை கொண்ட நடிகர் விஜய் நடிப்பை விட்டு வெளியேருவது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து உள்ளது.

திரையரங்கை திருவிழாவாக்கிய GOAT படத்தின் OTT ரிலீஸ் எப்போ தெரியுமா..? வெளியான தகவல்..! 1

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கோட். இப்படத்தில் இவருடன் நடிகை சினேகா,மீனாட்சி,மோகன், பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோர் நடித்து உள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

தற்போது இப்படத்தின் ஓடிடி தேதி குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் வருகிற அக்டொபர் மாதம் 10ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.அதே நாளில் ரஜினியின் வேட்டையன் திரையரங்குகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் GOAT படத்தை காண ஆவலுடன் காத்து உள்ளனர்.

வெளியிட்டது

புதிய செய்திகள்