யார் கடவுள்…எங்கு உள்ளார்…கடவுளை குறித்து மனிதனின் புரிதல் சரிதானா

மனிதனாக தோன்றிய அனைவர்க்கும் தன்னுள் இருக்கும் விடையில்லை கேள்விகளிள் முக்கியமானது கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதே? இருக்கிறார் என்றால்,அவர் எங்கு இருக்கிறார் என்று கேள்விகள் நம்முள் என்றோ ஒருநாளாவது எழுந்து தான் இருக்கும். கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு சிலர் ஆம் என்பர் சிலர் இல்லை என்பர் அப்படி ஏன் சிலர் இல்லை என்கின்றனர்.

யார் கடவுள்...எங்கு உள்ளார்...கடவுளை குறித்து மனிதனின் புரிதல் சரிதானா 1

விளம்பரம்

முதலில் கடவுளை வைத்து பிரச்னை செய்யும் பலரும் பூரிந்து கோலா வேண்டிய விஷயம், கடவுள் மதத்திற்கும், மனிதன் கேள்விகளும் அப்பாற்பட்டவர், இது எனது நம்பிக்கை. மனிதனில் வேறுபாடு பார்ப்பவனுக்கு தான் மதங்களும், வேறு வேறு கடவுளும் தெரிவார்கள். கடவுள் ஒருவனே. அப்படி ஒருவர் இருந்தால்.

ஆம் என்று சொல்பவருக்கும் இல்லை என்று சொல்பருக்கும் இருக்கும் ஒரே விதமாக இந்தக் கேள்விகள் எழலாம். கடவுள் என்ற சொல்லுக்கு கடந்தது என்று பொருள் அப்படியென்றால் கடவுள் எங்கு சென்றார் கேள்வியும் எழும்.

விளம்பரம்

கடவுள் எங்கும் செல்லவில்லை. கடவுள் அனைத்திலும் இருக்கிறார். அப்படி என்றால் கடந்தவர் என்பது பொய்யா என்றால் இல்லை, கடவுள் எல்லாப் பொருள்களையும் கடந்தவர் அதனால் தான் அவர் அனைத்திலும் நிறைந்தே இருக்கிறார்.

தொடர்புடையவை  சபரிமலை வழக்கு: மதங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு தொடர்பான கேள்விகளை வைக்கும் உச்ச நீதிமன்றம்

இப்போதும் புரியவில்லையா? கடவுள் அனைத்திலும் இருக்கிறார், அனைத்தையும் கடந்தும் இருக்கிறார். எதுவாக அவர் இருக்கிறாரோ அவையாகவே இருக்கிறார். எடுத்துக்காட்டாக தண்ணீரில் என்ன உள்ளது என்றால் சத்துக்கள் உள்ளது என்போம். சத்துக்கள் எங்கே காண்பியுங்கள் என்ற கேள்விக்கு பதில் இல்லை என்பது தான். நீர் மட்டுமல்ல அனைத்திலும் இருக்கிறார். இருப்பது என்று எந்தெந்த பொருள்கள் பொருள் படுகிறதோ அவை அனைத்தையும் கடந்தவர்தான் கடவுள். உலகம் இருக்கிறது, பிரபஞ்சம் இருக்கிறது அப்போது இதை அனைத்தையும் கடந்தவர் தான் கடவுள் என்கின்றீர்களா ஆம் அதான் உண்மையும் கூட.

விளம்பரம்

அப்படி என்றால் இறைவனைக் காண முடியாத என்ற கேள்வி எழலாம். நிச்சயம் காண முடியும். கடவுள் உங்கள் உள்ளயேயும் இருக்கிறார் என்னுளேயும் இருக்கிறார். அனைத்திலும் இருக்கிறார் என்பதால் நாம் அவரை எதிலும் காணலாம். நம்முள் எப்படி இருப்பார் என்ற கேள்வி எழுகிறதா? இதோ அதற்கான பதில், அன்பும் பண்பும் நம்முள் நற்குணங்களாய் இருப்பவை அதிலும் தான் கடவுள் இருக்கிறார். இதில் மட்டுமே கடவுள் இருக்கிறாரா என்றால் நிச்சயம் இதில் மட்டுமில்லை, அனைவரின் நம்பிக்கையிலும் நிறைந்தே இருக்கிறார். அமைதியிலும் இருக்கிறார் பேர் கூச்சலிலும் இருக்கிறார். இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

தொடர்புடையவை  இன்று தமிழகத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டம்!!

இருப்பவை அனைத்திலும் கடவுள் இருக்கிறார் இல்லாதவற்றையும் கடந்தும் கடவுள் இருக்கிறார் என்பதே கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்குப் பதில்.எங்கும் எதிலும் இருப்பவன் தான் கடவுள். இருப்பதை அனைத்தையும் கடந்தவன் தான் கடவுள்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment