Categories: சினிமா

ரவுடிகளை ஓடவிடும் ஆச்சி மெஸ் பாய்ஸ்..! மிரட்டலாக வெளியாகியது கோலிசோடா படத்தின் ட்ரைலர்…!

வெளியிட்டது

இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான தரமான படம் கோலிசோடா. இப்படத்திற்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. இப்படத்தில் சிறுவர்களை வைத்து சிறப்பான கதையை எடுத்து அசத்தியிருப்பார் இயக்குனர் விஜய் மில்டன். இப்படத்திற்கு பிறகு விஜய் மில்டன் இயக்கிய திரைப்படங்கள் இப்படம் அளவிற்கு வரவேற்பினை பெறவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரவுடிகளை ஓடவிடும் ஆச்சி மெஸ் பாய்ஸ்..! மிரட்டலாக வெளியாகியது கோலிசோடா படத்தின் ட்ரைலர்...! 1

தற்போது பல ஆண்டுகள் கழித்து இப்படத்தின் அடுத்த பாகத்தை இயக்குனர் விஜய் மில்டன் இயக்கி உள்ளார். இப்படத்தில் சேரன், ஷியாம் , புகழ் என பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்து உள்ளனர். கோலிசோடா படத்தின் கதையை மையமாக வைத்தே இப்படத்தின் கதை நகர்ந்து வருகிறது. இப்படம் தற்போது வெப் சீரியசாக வெளியாக இருக்கிறது.

அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இருக்கிறது. ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. இப்படம் ஹாட்ஸ்டாரில் வருகிற செப்டம்பர் 13ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாக உள்ளது.

Embed Video Credits : HOT STAR

வெளியிட்டது

புதிய செய்திகள்