கதாநாயகி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தவர் ஷாலினி. நடன கலைஞரான இவர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் கதாநாயகி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியில் தனது திறமைகளை காண்பித்து அசத்தி இருந்தார். இந்த போட்டியின் மூலம் இவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் பாகத்தில் வாய்ப்பு கிடைத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வது சீசனில் ராஜி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடரில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமானது உருவாகி இருக்கிறது. பலருக்கும் விருப்பமானவராக ஷாலினி மாறியுள்ளார். இவர் அடிக்கடி நடனமாடி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை பெருமளவு கவர்ந்து வருகிறார். இவரின் நடனத்தை காணவே இன்ஸ்டாகிராமில் பெரிய கூட்டம் உள்ளது.

தற்போது இவர் ஹிந்தி பாடலுக்கு குத்தாட்டம் போட்டு அசத்தி உள்ளார். இவரின் இந்த வீடியோக்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரசிகர்கள் இவரின் நடனத்தை பெருமளவு பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.