தான் ஒரு முட்டாள் என்றும், இப்போது ஏமாந்து விட்டேன் என்றும் சோகத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் பாக்கியலட்சுமி சீரியலில் கதாநாயகனாக நடித்து வரும் கோபி. ஏற்கனவே கோபி சீரியலை விட்டு விலகி இருக்கும் நிலையில், தற்போது அவரின் இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் சதீஷ். இவர் இந்த நாடகத்திற்கு முன்பாக சன் தொலைக்காட்சியில் பல தொடர்களில் நடித்திருக்கிறார். ஆனால் அப்போதெல்லாம் பிரபலமாகாத அவர் பாக்கியலட்சுமி சீரியலின் மூலம் குறுகிய காலத்திலேயே பிரபலமானார். தனது எதார்த்தமான நடிப்பாலும் காமெடியான முக பாவனைகளாலும் இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் இளைஞர்கள் மற்றும் குடும்ப தலைவர்கள் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார் சதீஷ் என்று சொன்னால் அது மிகையில்லை. நாடகம் பரபரப்பான கட்டத்தை எட்டி வரும் நிலையில், தற்போது நாடகத்தில் இருந்து விலகி இருக்கிறார் சதீஷ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்த சதீஷ், நான் சொல்லப் போகும் செய்தி சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தலாம், சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தலாம், ஆனால் இதை நான் செய்துதான் ஆக வேண்டும், பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து நான் இப்போது விலகுகிறேன், நான் நடிக்கும் சில எபிசோடுகள் மட்டும் இன்னும் பத்து முதல் 15 எபிசோடுகள் வரை மட்டுமே ஒளிபரப்பாகும். அதன் பின்னர் என்னுடைய பாகம் நிறுத்தப்படும். நான் சீரியலில் இருந்து நிரந்தரமாக வெளியேறுகிறேன், எனக்கு வேறு எந்த காரணமும் இல்லை, தனிப்பட்ட காரணங்களுக்காக சீரியலை விட்டு விலக்குகிறேன் என்று அறிவித்திருந்தார். இது பாக்கியலட்சுமி சீரியலின் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இரண்டு மனைவிகளை சமாளிக்க முடியாமல் தவிக்கும் குடும்ப தலைவனாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்தார் சதீஷ். சதீஷ் என்ற பெயரே மறந்து கோபி என்கிற பெயர் நீடிக்கும் அளவிற்கு தனது கதாபாத்திரத்துடன் ஒன்றிப் போயிருந்தார்.

நீங்கள் விலகினால் நாங்கள் இனிமேல் இந்த நாடகத்தையே பார்க்க மாட்டோம் என்றும் பலரும் கமெண்ட்களில் அவருக்கு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கும் சதீஷ், நேற்று வரை நான் அறிவாளி என்று நினைத்திருந்தேன். ஆனால் நான் ஒரு முட்டாள், நான் ஏமாந்து விட்டேன் என்று சோகத்துடன் பேசி இருக்கிறார். விஜய் டிவியின் டாப் ஹிட் தொடரான பாக்கியலெட்சுமி சீரியலுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக தனது கடின உழைப்பை கொடுத்து வரும் சதீஷ், விஜய் டிவியில் புறக்கணிக்கப்படுகிறார் என்கிற ஒரு தகவல் சமீப காலமாக வெளியாகி வந்தது. மேலும் விஜய் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்படும் அவார்ட் நிகழ்ச்சியில் கூட அவர் புறக்கணிக்கப்பட்டதாகவும் தகவல்கள் கொடிகட்டி பரவி வந்தது இதனால் தான் சதீஷ் தற்போது சீரியலில் இருந்து விலகி இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதெல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால் தற்போது இந்த தகவல்களை உறுதிப்படுத்தும் விதமாக சோகத்துடன் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் சதீஷ். அந்த வீடியோவை நீங்களும் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O