திருத்தப்பட்ட தேசிய குடியுரிமை சட்டம் தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் 13 கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளித்த நகல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அரசங்க வட்டார செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ, தனது ட்விட்டர் பக்கத்தில் தவறாக வழிநடத்த அவர்கள் தவறான தகவல்களுக்கும் அளிக்காதீர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தின் உண்மை இங்கே உள்ளது என பதிவிட்டுள்ளது .

இச்சட்டம் கட்டுக்கதை என்று கூறப்படுவதை அகற்றுவதற்கான முயற்சிதான். மேலும் இம்முயற்சி முட்டாள்தனமானது.
ஜனவரி 7, 2004 க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு, இது நம்பமுடியாத அளவிற்கு நியாயமற்ற செயலாக மாறும் சூழலில், முஸ்லிமல்லாதவர்களை இந்த வரையையிலிருந்து வெளியேற்றுகிறது. ஒரு வேலை நாம் இந்தியாவில் பிறந்ததற்கான ஆதாரம் மட்டும் போதுமென அரசாங்கம் கூறினாலும், இங்கு 90 சதவிகிதம் மக்கள் ஆதார் அட்டை வைத்திருக்கிறோம். ஆனால் அதில் பிறந்த ஊர் பெயர் குறிப்பிடுவது இல்லை.
இந்தியாவில் பெரும்பாலா மக்களிடம் பிறப்பு சான்றிதழ்கள் கிடையாது. பிறப்பை கொண்டே குடியுரிமை வாங்கி விடலாமென்றால், அந்நேரம் பிறப்பு சான்றிதழ் இல்லாமல் போனால், அதன் விளைவு மோசமானதாக இருக்கும்.
நாத்திகர்கள், திருநங்கைகள், பெண்கள் மற்றும் கல்வியறிவற்றவர்கள் விலக்கப்பட மாட்டார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் குடியுரிமையை நிரூபிப்பதற்கான நடைமுறை சிக்கல்கள் எத்தனை அறியாமை கொண்டது என இன்னும் மத்திய அரசு உணர்ந்துகொள்ளவில்லை. இது தொடர்பாக எத்தனை ஆய்வறிக்கைகள் வெளியானாலும் இந்த நிலை மாறாது. சிறிய மக்கள் தொகை கொண்ட அசாமில் என்.ஆர்.சி அமல்படுத்த, செயல்முறை எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை நிரூபித்துள்ளது. இந்நிலையில், மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று அரசாங்கம் உத்தரவாதம் அளிக்க முடியுமா? இத்தகைய குளறுபடிகள் இருப்பதனால் தான் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் பேச்சு பொருளாகியுள்ளது.