அகமதாபாத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 28 வயது பெண்ணின் புகார் அடிப்படையில் இதுவரை வழக்கு பதிவு செய்யாமல் காவல் துறை காலம்தாழ்த்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நிகழ்வு திட்டமிடுபவராக பணியாற்றிவரும் பெண், தொழிலதிபர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை ஆளானதாக கடந்த 19 நாட்களுக்கு முன்பாக காவல் துறையில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் வழக்கு பதிவு செய்ய மறுத்த காவல் துறையின் போக்கால், அப்பெண் தொழிலதிபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குஜராத் உள்துறை அமைச்சர் பிரதப்சிங் ஜடேஜாவுக்கு மனு அனுப்பியுள்ளார்.

அம்மனுவில், கடந்த 2013ஆம் ஆண்டு பூச்சிக்கொள்ளி தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது தொழிலதிபரால் அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வணிகம் ரீதியாக வாடிக்கையாளர் ஒருவரை சந்திக்க செல்லவேண்டுமென காந்தி நகருக்கு அழைத்து சென்ற அவர், குடாசன் கிராமத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவும் எடுத்துள்ளார். அதன் பின்னர் வீடியோவை வைத்து மிரட்டி, பலமுறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அந்த தொழிலதிபர் தன்னுடைய 32 வயது மிக்க உதவியாளரையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றசாட்டியுள்ளார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், 6 ஆண்டுகளுக்கு முன் நடந்த விவகாரம் தற்போது தான் கிடைத்திருக்கிறது. ஆதலால் குற்றச்சாட்டினை ஆராய்ந்த பின்னரே வழக்கு பதிவு செய்யப்படுமென தெரிவித்துள்ளனர்.