Categories: அரசியல்

முஸ்லீம்களை புறக்கணிக்கும் இந்திய வங்கிகள்!

தேசிய குடிமக்கள் திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம் ஆகியவற்றை தொடர்ந்து இந்திய வங்கிகளுக்கும் சொத்துக்கள் வாங்குவது தொடர்பாக மத ரீதியான போக்கை முன்னெடுப்பது அதிர்ச்சியளிக்கிறது.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சுமார் 20 மாதங்களுக்கு முன்னர் ரிசர்வ் வங்கி கொண்டுவந்த மாற்றம் தற்போது சர்ச்சையாகி உள்ளது.

முஸ்லீம்களை புறக்கணிக்கும் இந்திய வங்கிகள்! 1

இந்திய ரிசர்வ் வங்கி, அந்நிய செலாவணி மேலாண்மை (இந்தியாவில் அசையாச் சொத்தை கையகப்படுத்துதல் மற்றும் பரிமாற்றம் செய்தல்) விதிமுறைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்தது.

பிரிவு 7ல் புதிய விதியை அறிமுகப்படுத்திய ரிசர்வ் வங்கி, ‘நீண்ட கால விசா’ (எல்.டி.வி) வைத்திருப்பவர்கள் இந்தியாவுக்குள் குடியிருப்பு சொத்துக்களை வாங்க அனுமதித்தது. மற்ற நாடுகளில் நீண்ட கால விசாக்களை கொண்டிருக்கும் இந்தியர்களும், அதேபோல், இந்தியாவில் பாகிஸ்தானிலிருந்து “நீண்ட கால விசா” வைத்திருக்கும் முஸ்லீம்களும் (அதாவது, கணவனோ அல்லது மனைவியோ இந்திய குடிமக்களாக இருப்பர்) சொத்துக்கள் வாங்க அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் தற்போதைய புதிய விதி, நீண்ட நாள் விசாகளை கொண்டிருக்கும் நபர்கள் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் சிறுபான்மையினராக இருக்க வேண்டும் என கூறுகிறது.

இந்த புதிய விதி சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் குடியேறிய முஸ்லீம் அல்லாதோருக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதோடு, சட்ட ரீதியாக குடியேறிய முஸ்லீம்களை ஓரம் கட்டுவது தற்போது சர்ச்சையாகி இருக்கிறது.

அதேபோல், சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய முஸ்லீம் அல்லாதோருக்கு, “குடியுரிமை அல்லாத வங்கி கணக்கும்” திறக்கவும் ரிசர்வ் வங்கி ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த நடைமுறைக்கும் KYC (உங்கள் வாடிக்கையாளர்களை தெரிந்துகொள்ளுங்கள்) முறையில், அரசு ஆவணங்களிலிருந்து மதத்தை வடிகட்டுகிறார்கள்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்