Categories: அரசியல்

அமெரிக்கா இரானுப்படையை பயங்கரவாதம் அமைப்பென அறிவிப்பு!

அமெரிக்கா இராணுவ படையை பயங்கரவாத அமைப்பு என ஈரான் அறிவித்துள்ளது.

ஏழு சகோதரிகள் என அழைக்கப்படும் இஸ்லாமிய நாடுகளில் உள்ள எண்ணெய் வளங்களை சூறையாட அமெரிக்கா முயற்சித்து வருகிறது. அதற்காக அணுசக்தி வைத்திருப்பதாக குற்றம்சாட்டி அமெரிக்க படையெடுத்து அந்நாடுகளை ஆக்கிரமிப்பு செய்வதை வழக்கமானதாக கொண்டுள்ளது. இதன்படி, அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே சமீபத்தில் மோதல் வெடித்தது.

அமெரிக்கா இரானுப்படையை பயங்கரவாதம் அமைப்பென அறிவிப்பு! 1
ஈரான் நாடாளுமன்றம்

இதன் தொடர்ச்சியாக அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதும், நிலைமை அசாதாரணமாக மாறியுள்ளது. டிரம்மில் தவறான கொள்கை, மூடத்தனம் ஆகியவற்றால் உலக நாடுகள் ஸ்தம்பித்து கிடக்கின்றன.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஈராக்கில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் இருநாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் சுலைமானி கொலைக்கு காரணமான அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத இயக்கமாக ஈரான் அறிவித்துள்ளது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்