தமிழில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் வெற்றி பெறுபவர் இயக்குனர் பார்த்திபன். இவர் ஆரம்பத்தில் நடிகராக இருந்து பின்னர் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இவர் தற்போது எடுத்துள்ள படம்தான் இரவின் நிழல். இந்த படம் 96 மணி நேரத்தில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் ஆகும். இந்த படத்தில் youtube பிரபலம் நடிகை பிரிகிடா நடித்துள்ளா.ர் மேலும் இந்த படத்தில் வரலட்சுமி, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அகிரா ப்ரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளா.ர் ஏற்கனவே ஜெர்மன் மொழியில் எடுக்கப்பட்ட ஒரு படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு ஆஸ்கர் விருது வரை போயிருந்தது. அதற்கு அடுத்தபடியாக பார்த்திபன் ஒரே சாட்டில் இரவின் நிழல் படத்தை எடுத்துள்ளார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்

இந்தப் படம் வருகிற ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர் youtube பிரபலம் பிரிகிடா. இவர் ஒரு youtube சேனலில் வெளிவந்த ஆஹா கல்யாணம் என்ற தொடரில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தன்னுடைய முதல் நடிப்பிலேயே பல ரசிகர்களின் உள்ளத்தை கவர்ந்திருந்தார் என்று சொன்னால் அது மிகையில்லை. இவர் இரவின் நிழல் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிவதற்கு சென்றார். ஆனால் இவரின் திறமையை பார்த்த பார்த்திபன் இவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை வழங்கினார். பிரிகிடாவும் தனது முழுமையான நடிப்பையும் வெளிப்படுத்தி உள்ளார். அதில் ஒரு சீனில் 19 நொடிகளில் உடையை மாற்றிக்கொண்டு நடித்துள்ளார். ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதால் உடை மாற்றுவதற்கும், ஓய்வெடுப்பதற்கும் நேரமில்லை.
இந்த நிலையில் பிரிகிடா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அரை நிர்வாணமாக நடித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர் தான் முதலில் இந்த அரை நிர்வாணமாக நடிப்பதற்கு மிகவும் தயங்கினேன், என் வீட்டாரிடமும் கேட்டேன். ஆனால் இந்த கதாபாத்திரம் மிகவும் புனிதமானது. நீங்கள் கதையைப் பார்க்கும்போது அந்த இடத்தில் உங்களுக்கு கவர்ச்சி தெரியாது. ஏனென்றால் அந்த கதாபாத்திரம் அவ்வளவு புனிதமானது. படம் படம் பார்க்கும் பொழுது நீங்களும் அதை உணர்வீர்கள் என்று கூறினார். எனக்காக இயக்குனர் பார்த்திபன் அவர்களும் என் வீட்டாரிடம் பேசி சம்மதம் வாங்கினார். அதனால் தான் இந்த சீனை எங்களால் எடுக்க முடிந்தது என்று கூறினார். நீங்கள் அந்த சீனை பார்க்கும் போது அழது விடுவீர்கள் என்றும், ஏ.ஆர் ரகுமான் இசை உங்களை அழ வைக்கும் என்றும் பிரிகிடா கூறினார். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below
Youtube Video Code Embed Credits: Wow Tamizhaa