வில்லியாக மாறும் ராதிகா? கோபியை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தும் ராதிகாவின் அம்மா.. நல்லா பண்றீங்கமா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் ரேட்டிங்க் தொடர்களில் ஒன்றுதான் பாக்கிய லெட்சுமி. இந்த சீரியல் ஆரம்பித்த போது பாக்கியாவின் கதாபாத்திரம் நம் வீடுகளில் இருக்கும் அம்மா போலவே இருப்பதால் இந்த சீரியலுக்கு பல ரசிகைகள் கிடைத்தனர். வீட்டு வேலைகளை செய்து கொண்டு, சமையல் வேலைகளையும் செய்து கொண்டு ஓய்வில்லாமல் வீட்டில் உழைத்த போதிலும் அங்கீகரிக்கப்படாத ஒரு ஜீவனாக இருப்பார் அம்மா. அந்த கேரக்டரை பிரதிபலிப்பதால் பாக்கியா அனைவராலும் விரும்பப் பட்டார். ஆரம்பத்தில் குடும்ப பாங்காக சென்று கொண்டிருந்த கதையில் திடீர் திருப்பமாக பாக்கியாவின் கணவர் கோபிக்கும் தனது முன்னாள் காதலிலுக்கும் உறவு இருப்பது போல காண்பிக்கப்பட்டது. கோபி திடீரென ஒரு நாள் தனது கல்லூரி காதலி ராதிகாவை சந்திக்கிறார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

வில்லியாக மாறும் ராதிகா? கோபியை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தும் ராதிகாவின் அம்மா.. நல்லா பண்றீங்கமா 1

விளம்பரம்

அப்போது அவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கும் நிலையில், ராதிகாவின் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனால் கோபி தனது மனைவி பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவுடன் வாழ முடிவெடுக்கிறார். ஆனால் பாக்கியாவுக்கும் ராதிகாவிற்கும் நல்ல நட்பு இருந்தது. இதனால் ராதிகா பாக்கியா இருவரிடமிருந்தும் கோபி இத்தனை காலம் தப்பித்து வந்தார். ராதிகாவின் முன்னாள் கணவர் கோபியின் வீட்டிற்கு வந்து கோபி பற்றிய எல்லா உண்மைகளையும் போட்டு உடைக்கிறார். அதை அறிந்து கொண்ட கோபி டென்ஷனில் மரத்தின் மீது காரை மோதி விடுகிறார். இதனால் மருத்துவமனையில் சேர்த்த அவருக்கு ராதிகா மனைவி என்று மருத்துவ படிவத்தில் கையெழுத்து இடுவதையும், கோபி ராதிகா மருத்துவமனையில் பேசிக் கொண்டிருப்பதையும் பாக்கியா பார்த்து விடுகிறார்.

தொடர்புடையவை  மனோஜை அசிங்கப்படுத்துவதை தாங்க முடியாமல் பணத்தை திருப்பி கொடுத்த ரோகினி..! அதிர்ச்சியாகிய விஜயா மற்றும் மனோஜ்..!

வில்லியாக மாறும் ராதிகா? கோபியை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தும் ராதிகாவின் அம்மா.. நல்லா பண்றீங்கமா 3

விளம்பரம்

இங்கிருந்து கதை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியது. வீட்டிற்கு சோகமாக திரும்பிய பாக்கியா உண்மையை உணர்ந்து நிலை குலைந்து போனார். தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய கோபியிடம் உண்மைகளை எல்லாம் சொல்லி சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். இதுவரை ராதிகாவை பற்றி எந்த ப்ரோமோவும் வெளியாகாத நிலையில், தற்போது ராதிகா பற்றி ஒரு ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் ராதிகாவும் அவரது மகள் மயூவும் ஊரை விட்டுப் போக முடிவு செய்துள்ளனர். இதை ராதிகாவின் தாயார் தடுக்கிறார். பாக்யா விஷயத்தை தவிர உனக்கு கோபியிடம் எந்த பிரச்சினையும் இல்லை தானே? கோபியை திருமணம் செய்து கொள் என்று ராதிகாவை கட்டாயப்படுத்துகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..Watch BakkiyaLakshmi promo below..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Vijay Televison

விளம்பரம்

Leave a Comment