ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள டிரைவர் ஜமுனா படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.தனது இயல்பான நடிப்பாலும் தோற்றத்தாலும் பல ரசிகர்களை பெற்று இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த காக்கா முட்டை படம் பெரிய அளிவில் ஹிட் அடித்தது. பெரிய ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பேன் என்று இல்லாமல், யதார்த்தமான கதைகளை நடித்து வெற்றி பெற்றுள்ளர் ஐஸ்வர்யா.அந்த வகையில் தற்போது பெண் கார் ஓட்டுநராக ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். ஒரு பெண் கார் டிரைவராக வேலை பார்த்தால் வரும் இன்னல்கள் பற்றிய படமாக உள்ளது. அந்த படத்திற்கு டிரைவர் ஜமுனா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை வத்திக்குச்சி படத்தை இயக்கிய இயக்குனர் கிங்க்ஸ்லின் இயக்கியுள்ளார். ட்ரைலர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை பதினெட்டு ரீல்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. கோகுல் பினாய் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். க்ரைம் திரில்லர் பாணியில் இந்த படத்தை எடுத்துள்ளனர். படத்தின் இறுதிகட்டப் பணிகள் நிறைவடைந்து படம் வெளியீ்ட்டுக்கு தயாராக உள்ளது. சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருந்தது. சமீபகாலமாக பெண்களை முன்னிறுத்தி வரும் படங்களில் ஐஸ்வர்யா நடித்து வருகிறார். அந்த வகையில் டிரைவர் ஜமுனா படமும் மிகப்பெரிய வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படம் முழுவதும் சாலையில் நடக்கும் காட்சிகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் டிரைவரின் ஒரு நாள் பயணத்தை குறிக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரத்தம் சொட்ட சொட்ட காயத்துடன் நின்று ஐஸ்வர்ய டீ குடிப்பது போல இருந்தது. தற்போது ட்ரைலர் வேற லெவல் த்ரில்லிங்காக உள்ளது. தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம் என 4 மொழிகளில் ட்ரைலர் வெளியாகி உள்ளது. நீங்களும் அந்த ட்ரைலரை காண..Watch the Driver Jamuna Trailer below..
Video Embed Credits: Think Music