கழுத்தில் தாலியுடன் மாடர்ன் உடையில் செம்ம கெத்தாக வந்து இறங்கிய நயன்தாரா..

தமிழ் திரையுலகில் முடிசூடா அரசியாக இருப்பவர் நடிகை நயன்தாரா. கேரளாவில் ஒரு சிறிய தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர் இன்று தமிழ்நாட்டின் லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையில்லை. அதற்கு முக்கிய காரணம் அவருடைய அயராத கடின உழைப்பு மற்றும் நடிப்புத் திறமைதான். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்பில் அசத்தி விடுவார் நயன்தாரா. இவருக்கென தமிழில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உண்டு. சமீபகாலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. ஐரா, கொலையுதிர் காலம், நெற்றிக்கண், O2 போன்ற கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கழுத்தில் தாலியுடன் மாடர்ன் உடையில் செம்ம கெத்தாக வந்து இறங்கிய நயன்தாரா.. 1

விளம்பரம்

தற்போது அட்லி இயக்கும் ஹாலிவுட் படமான ஜவானில் ஹீரோயினாக நடக்க உள்ளார். ஹிந்தியில் இது இவருடைய முதல் படமாகும். இந்த நிலையில் கடந்த மாதம் 9ம் தேதி நயன்தாராவுக்கும் அவரது காதலன் விக்னேஷ் சிவனுடன் திருமணம் நடைபெற்றது. சென்னை மகாபலிபுரத்தில் ஒரு தனியார் ரிசார்ட்டில் மிக பிரம்மாண்டமாக நடந்த அந்த திருமணத்தில் திரையுலகினர் பலர் கலந்து கொண்டனர். அந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. திருமணம் முடிந்த கையோடு திருப்பதி சென்று சாமி தரசினம் செய்துவிட்டு பின்னர் கொச்சியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றனர். பின்னர் இருவரும் தாய்லாந்தில் ஹனிமூனுக்கு சென்றனர். ஒரு மாதம் திருமணம், ஹனிமூன், சாமி தரிசனம் என்று இருந்ததால் படபிடிப்புகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது.

தொடர்புடையவை  விடுதலை 2 படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

கழுத்தில் தாலியுடன் மாடர்ன் உடையில் செம்ம கெத்தாக வந்து இறங்கிய நயன்தாரா.. 3

விளம்பரம்

இந்த நிலையில் அனைத்தையும் முடித்துவிட்டு இந்தியா திரும்பியுள்ளார் நயன்தாரா. ஹிந்தியில் உருவாகி வரும் ஜவான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக விமான நிலையம் சென்றுள்ளார். கழுத்தில் தாலியுடன், கருப்பு நிற மார்டன் உடையில் செம்ம கெத்தாக நடந்து வருகிறார் நயன்தாரா. அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

விளம்பரம்

Leave a Comment