தமிழ் திரையுலகின் காமெடியில் முடிசூடா மன்னனாக விளங்கிக் கொண்டிருப்பவர் நடிகர் வடிவேலு. காமெடி உலகில் இவரை அடித்துக் கொள்ள ஆட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்போது நாய் சேகர் என்னும் படத்தில் நடித்து வருகிறார். சில காலமாக திரையில் நடிக்காமல் வடிவேலு ஒதுங்கி இருந்தபோது அவரை வைத்து தான் மீம்ஸ்களும், டெம்ப்ளேட்டுகளும் இருக்கும். அந்த அளவிற்கு ஒவ்வொருவரும் வாழ்விலும் தவிர்க்க முடியாத சக்தியாக வடிவேலு இருந்து வருகிறார். தனது எதார்த்தமான பேச்சினாலும் உடல் மொழியினாலும் இவர் பலரையும் கவர்ந்திருக்கிறார். இன்று வரை இவரின் இடத்தை நிரப்புவதற்கு ஆளே இல்லாமல் போய்விட்டது.

மதுரையில் ஒரு கண்ணாடி கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த வடிவேலுவை திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தியவர் ராஜ்கிரன் தான். ராஜ்கிரன் நடிப்பில் வெளியான என் ராசாவின் மனசிலே என்ற படத்தில் இவரது நடிப்பு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. பின்னர் கவுண்டமணி செந்திலுக்கு மூன்றாவது காமெடியனாக நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் தனி காமெடியனாக உருவெடுத்த அவர் இன்று வரை அந்த இடத்தை யாருக்கும் தராமல் இருந்து வருகிறார். சில ஆண்டுகள் அவர் திரைத் துறையில் இருந்து ஒதுங்கி இருந்தபோது, அந்த இடம் வெற்றிடமாகவே இருந்தது. சின்ன கலைவாணர் விவேக்கும் மறைந்து விட்டதால் பலர் காமெடி என்ற பெயரில் மொக்கை போட்டு வந்தனர்.

இந்த நிலையில் தற்போது வடிவேலு மீண்டும் படங்களின் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் தற்போது நாய்சேகர் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான அப்பத்தா பாடல் சமீபத்தில் வெளியாகியிருந்தது.்இந்த பாடல் வெளியான சில நிமிடங்களில் மில்லியன் பார்வையாளர்களை தாண்டியது. இந்தப் பாடலை பிக்பாஸில் கலந்து கொண்ட அசல் கோளாறு எழுதி இருக்கிறார். பாடலை வடிவேலுவே பாடி இருந்தார். டப்பிங் தியேட்டரில் அசல் கோளாறுடன் இணைந்து சேட்டை செய்த வடிவேலுவின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! Watch the Below Video..!
YouTube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7