ஜெயிலர் படம் வெளியாக இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில் படத்திலிருந்து புதிய ப்ரோமோ ஒன்றை தற்போது படக் குழுவினர் வெளியிட்டிருக்கின்றனர். ரஜினிகாந்தின் மகனாக நடிகர் வசந்த் ரவியும், பேரனாக யூடியூபை கலக்கிய ரித்திக்கும் நடித்து வருகின்றனர். தாதா்தாவும் பேரனும் ஒன்றாக இருப்பது போன்ற ஒரு புது வீடியோவை தற்போது படக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 169-வது திரைப்படமாக வெளிவர இருக்கும் திரைப்படம் தான் ஜெயிலர். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிகைகள் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் வசந்த் ரவி, யோகி பாபு, மோகன்லால், ஜாக் ஷெரிப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்திலிருந்து பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் படத்தின் டீசரும் ட்ரைலரும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் அடுத்தடுத்த அப்டேட்டுகளை எதிர்பார்த்து தற்போது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அந்த வகையில் தற்போது புதிய புரோமோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். ட்ரைலர் வெளியான போது ஒரு குடும்ப தலைவராக ரஜினிகாந்த் இருப்பது அனைவருக்கும் தெரிந்தது் ரம்யா கிருஷ்ணன் மனைவியாகவும், வசந்த் ரவி மகனாகவும் யூடியூபை கலக்கி வந்த சிறுவன் ரித்திக் ரஜினிகாந்தின் பேரனாகவும் இருப்பது போன்ற ட்ரைலர் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தனது பேரனை அழைத்துக்கொண்டு சூப்பர் ஸ்டார் கடைக்கு செல்கிறார். அங்கு ஒரு போனை எடுத்துக் கொண்டு ஹாய் பிரண்ட்ஸ் இவர்தான் முத்து என்று சிறுவன் வீடியோ எடுக்கிறான்.
இவரு இப்போ கேரட் வாங்கிக்கிட்டு இருக்காரு, என்று சொல்லி யூடியூபில் விலாக் செய்வது போல அந்த சிறுவன் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறான். எனக்கு கேரட் தான் பிடிக்கும் ஆனால் இவர் பச்சையாக எதையோ வாங்கிக் கொண்டிருக்கிறார், ஆனால் இவர் கொடுக்கும் எதையும் நான் சாப்பிடப்போவதில்லை என்று சொல்லி சூப்பர் ஸ்டாரை கலாய்த்துவிட்டு ஓடுகிறான். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. ப்ரோமோவை பார்த்த பலரும் தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையேயான பாசம் சூப்பராக இருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Code Embed Code Credits: Sun TV