Categories: சினிமா

முத்துவேல் பாண்டியன் வந்துவிட்டார்.! ஜெயிலர் படத்தில் இருந்து குட்டி டீசரை வெளியிட்டு வாழ்த்திய படக்குழு

வெளியிட்டது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் முன்னிட்டு தற்போது ஜெயிலர் படத்திலிருந்து ஒரு சின்ன டீசர் ஒன்றை படக் குழு வெளியிட்டு இருக்கிறது. தமிழ் உலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த் இவர் 1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் என்கிற படத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார். இவரை திரைத்துறைக்கு கொண்டு வந்தது இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் தான். அன்று தொடங்கி இன்று வரை 50 ஆண்டுகளில் சுமார் 168க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்து இருக்கிறார் ரஜினிகாந்த். இவர் தற்போது தனது 169 வது படமான ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ரஜினி இன்று தனது 73 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு ஜெயிலர் படத்திலிருந்து ஒரு குட்டி டீசர் ஒன்றை வெளியிட்டு படக்குழு வாழ்த்தியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முத்துவேல் பாண்டியன் வந்துவிட்டார்.! ஜெயிலர் படத்தில் இருந்து குட்டி டீசரை வெளியிட்டு வாழ்த்திய படக்குழு 1
இன்று மாலை 6:00 மணிக்கு முக்கிய அப்டேட் ஒன்று வெளியிடப்படும் என்று ஏற்கனவே படக்குழு அறிவித்து இருந்த நிலையில் இந்த வீடியோ வெளியாகியிருக்கிறது. இந்த படத்தினை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறது. படத்தில் அவரது பெயரை குறிக்கும் வகையில் முத்துவேல் பாண்டியன் இன்று 6 மணிக்கு வருகிறார் என்று ட்வீட் செய்திருந்த நிலையில் தற்போது இந்த வீடியோ வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் என பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

தற்போது வெளியாகியிருக்கும் அந்த டீசரில் ஒரு அறையில் ஜன்னல்கள் மட்டும் திறந்து இருக்கிறது. அதன் வழியாக சிறிது வெளிச்சம் வருகிறது. கால் மேல் கால் போட்டு சூப்பர் ஸ்டார் அமர்ந்திருக்கிறார். பின்னர் அவர் தனது மூக்கு கண்ணாடியை அணிந்து கொண்டு வீட்டிலிருந்து வெளியே வந்து பட்டா கத்தியை எடுத்து திரும்பி பார்க்கிறார். அப்போது க்யூட்டாக சிரிக்கிறார். செம மாஸாக இருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண.! கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்..! Watch the below video.!

Youtube Video Code Embed Credits: Sun Tv

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்